ஒதுக்கீடு - Reservation
சுயநிலை விளக்கம்: யார் மனதையும் புண்படுத்தும் நோக்கில் இந்தப் பதிவு எழுதப்பட்டது அல்ல... அவ்வாறு புண்பட்டால் பல்லாயிரம் ஆண்டுகளாக செய்த கொடுமையின் குற்ற உணர்ச்சியாக இருக்குமே தவிர, இந்தப் பதிவினால் இருக்காது. நம் நாட்டின் விடுதலைப் போராட்டத்திற்கு வித்திட்டவன் மங்கள் பாண்டே எனவும் அவனே 1857 சிப்பாய் கலகத்துக்குக் காரணம் எனவும் பாடப் புத்தகத்தில் படித்த நியாபகம்... உண்மை அதுவல்ல... கங்கையில் குளித்து விட்டு கரையேறிக் கொண்டிருந்த பாண்டேயின் மீது மோத வந்த ஒரு தலித் சிறுவனைக் கடிந்து "நீ தொட்டால் தீட்டு... மீண்டும் குளிக்க வேண்டும்..." என்றான் பாண்டே... பதிலாய் அந்த சிறுவன் கேட்ட கேள்வியே நம் விடுதலைக்கு வித்திட்டது... அந்த சிறுவன் கேட்டான் "மாட்டுக் கொழுப்பு தடவிய தோட்டாவினை வாயால் கடித்து துப்பாக்கியில் பயன்படுத்தும் நீ, பிராமணனா? நான் தொட்டால் தீட்டா?" இந்தக் கேள்வியால் பாண்டேயினுள் எழுந்த சாதிப்பற்றினால் தான் சிப்பாய் கலகம் துவங்கியது. எப்படியோ, இந்திய விடுதலைக்கு வித்திட்ட அந்த முகம் தெரியாத சிறுவனுக்கு இந்தப் பதிவினை சமர்ப்பிக்கிறேன். ஒதுக்கீடு ...