நோபல் அறிஞர் ருடால்ஃப் மோஸ்பயர் - Rudolph Mössbauer
ஜனவரி 31 - இன்று 1961 ஆம் ஆண்டு இயற்பியலுக்கான நோபல் பரிசை வென்ற ருடால்ஃப் லுட்விக் மோஸ்பயரின் (Rudolph Ludwig Mössbauer) பிறந்த தினம். பின்னீடு (recoil) இல்லாத காம்மா கதிர் உமிழ்வு மற்றும் கதிர் உள்வாங்குதல் (Gamma emission and absorption) குறித்து இவர் எழுதிய ஆய்வுக்கட்டுரைகள் மூலமும் இரிடியம் கொண்டு மேற்கூறிய விளைவை செய்துகாட்டியதன் மூலமும் அறிவியல் உலகத்தைத் தன்பால் திரும்ப வைத்து நோபல் பரிசையும் தட்டிச் சென்றவர். ருடால்ஃப் லுட்விக் மோஸ்ப்யர் (31-01-1929 - 14-09-2011) மோஸ்பயர் 31 ஜனவரி 1929 அன்று ஜெர்மனி மியூனிக் நகரில் பிறந்தார். மியூனிக் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் பயன்பாட்டு இயற்பியலில் (Applied Physics) 1952 ஆம் ஆண்டு பட்டம் பெற்றார். பின்னர், ஹீடல்பெர்க் நகரில் உள்ள மேக்ஸ் பிளாங்க் மருத்துவ ஆய்வுக் கழகத்தில் பணியில் சேர்ந்தார். அந்த ஆய்வுக்கூடத்தில் காம்மா கதிர் உமிழ்வு பற்றி ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வுக்கூடம் எந்தப் பல்கலைக்கழகத்துடன் தொடர்பில் இல்லாததால், ஆய்வுக் கட்டுரை சமர்ப்பதிலும், முனைவர் பட்டம் பெறுவதிலும் இவருக்கு சிரமங்கள் இருந்தது. இருப்பின