டார்வின் நாள் - Darwin Day

இன்று 12 பிப்ரவரி, உலகம் போற்றும் அறிவியல் மேதை சார்லஸ் டார்வினின் பிறந்த நாள். இன்றைய நாளை, உலகம் முழுதும் அறிவியலைப் போற்றுவோர் டார்வின் நாளாகக் கொண்டாடுகின்றனர். டார்வினின் கொள்கைகளைப் பாடப் புத்தகத்திலிருந்து நீக்குவோம் என ஆள்வோர் முழங்கும் காலத்தில் அவர் கருத்துக்களை, கூற்றுக்களை மீண்டும் மீண்டும் சொல்லவேண்டிய தேவை இருந்துகொண்டே இருக்கிறது. 
சார்லஸ் டார்வின் (12.2.1805 - 19.4.1882) 

ஏற்கனவே, டார்வின் பற்றி ஒரு பதிவு எழுதி இருக்கிறேன். (படிக்க: https://goo.gl/choC4D )

எனவே, இந்தப் பதிவில் அவருடைய சில கூற்றுக்கள் தன்னை எழுத உள்ளேன்.

1. ஒரு மனிதனின் நட்புக்கள் தான் அவனுடைய மதிப்பின் சிறந்ததொரு அளவுகோலாக இருக்கிறது. 
A man's friendships are the one of the best measures of his worth.
2. ஒரு அமெரிக்க குரங்கு, மது அருந்தி போதை அடைந்த பின்பு, தன் வாழ்நாளில் மதுவை மீண்டும் தொடாது. எனவே, அது பெரும்பாலான மனிதர்களை விட அறிவுடையது தான்.
An american monkey, after getting drunk on brandy, would never touch it again, and thus is much wiser than most men.
 3. சில நேரங்களில், புதிய உண்மைகளை நிறுவுவதை விட ஆகச்சிற்ந்தப் பணி, நிலவும் பிழை நீக்குதல் ஆகும். 
To kill an error is as good service as, and sometimes even better than, the establishment of a new truth or fact.
 4. உள்ளுணர்வு  என்பதன் சாரமே அது எந்தக் காரணத்தையும் பின்பற்றாமல் கட்டற்று இருப்பதே.
The very essence of instinct is that it's followed independently of reasons.
 5. இந்த நீண்ட மனித (அனைத்துயிரிகளின்) வரலாற்றில், யார் ஒன்று கூடி வாழ்ந்து, திறம்பட தம்மை மாற்றிக் கொள்ளக் கற்றுக் கொள்கிறார்களோ, அவர்களே பிழைத்திருக்கிறார்கள்.
In the long history of humankind (and animalkind, too) those who learn to collaborate and improvise most effectively have prevailed. 
6. நாம் எப்படியும் ஒத்துக் கொள்ளத்தான் வேண்டியிருக்கிறது. என்னைப் பொருத்தவரையில், என்னதான் நற்குணமிருந்தாலும், மனிதன் தன்னுடலில் அழிக்க முடியாத தன் ஆதியினத்தின் முத்திரையைத் தாங்கி உள்ளான். 
We must, however, acknowledge, as it seems to me, that the man with all his noble qualities... still bears in the bodily frame the indelible stamp of his lowly origin.
7. ஒரு மனிதன் தன் நேரத்தில் ஒரு மணி நேரத்தை வீணாக்கத் துணிந்தால், அவன் வாழ்வின் மதிப்பினை இன்னும் உணரவில்லை.
 A man who dares to waste one hour of his time has not discovered the value of Life.
8. ஒரு அறிவியலாளன் தற்பிடித்தமோ, விருப்பமோ கொண்டிருக்கக் கூடாது. ஒரு கல் இதயமாக இருக்க வேண்டும்.
A scientific man ought to have no wishes, no affections. A mere heart of Stone.

Comments

Popular posts from this blog

அகர முதல - சிறுகதை (திருக்குறள் கதை) குறள் 0001

புறநானூறு பேசும் நீர் மேலாண்மை

வான்கா - Vanka