வர்றட்டா சார்? - குறள் கதை
வர்றட்டா சார்? - முடிவிலி இன்னாது இரக்கப் படுதல் இரந்தவர் இன்முகங் காணும் அளவு. இயல்: இல்லறவியல் அதிகாரம்: ஈகை குறள்: 224 "ச்ச, நல்ல நேரம் பாத்து இப்படி ஆவுதே?" என இன்னும் நான்கு மிதி மிதித்தேன். எந்தவொரு அசைவும் இல்லை. அலுவலகத்திற்கு வேறு நேரம் ஆகிக் கொண்டிருந்தது. நான் பணிபுரியும் நிறுவனத்தின் உயரலுவலரிடம் வேளச்சேரி அடுக்ககத் திட்ட அறிக்கை கொடுக்க நேற்று இறுதி நாள். நேற்றிரவு வரை அலுவலகத்தில் இருந்து மொத்த வேலையையும் முடித்து திட்ட அறிக்கை பணியும் முடித்தாகிவிட்டது. மின்னஞ்சலில் அனுப்பிய சில நொடிகளில் என்னை அழைத்தவர், "காலையில வந்ததும் என் டேபிள்ல ஹார்ட் காப்பி வச்சிடுங்க, க்ரேட் வொர்க், செந்தில்" என்று அழைப்பைத் துண்டித்திருந்தார், நான் சொன்ன 'ஓகே சாரை'க் காதில் வாங்காமலே. நேற்று இரவு பத்தே முக்காலுக்கு வீடு வந்து சேரும் போது நாங்கள் இருவரும் மொத்தமாய் நனைந்திருந்தோம். வந்து உறங்கி நேரம் கழித்து எழுந்து, இவனை மிதித்து கொண்டிருந்தேன். கிளம்புவேனா என்றான் இந்த ஹோண்டா யுனிகார்ன். கைக்கடிகாரத்தைப் பார்த்தேன், இன்னும் இவனையே மிதித்த...