வாழ்க்கை ஒரு வட்டம் - குறள் கதை
வாழ்க்கை ஒரு வட்டம் - முடிவிலி "டேய் குமாரு, ஏதாவது கான்செப்ட் கிடைச்சுதாடா?" என்று கேட்டான் வெற்றி. 'நான் மட்டும் என்ன கான்செப்ட்டைப் பாக்கெட்லயா வச்சுக்கிட்டு சுத்திட்டு இருக்கேன்?' என்பது போல குமார் பார்ப்பதைக் கண்டு சிரித்தாள் அகல்யா. "ஏ, அகல்யா, உனக்கு சிரிப்பா இருக்கா? 200K subscribers தேத்தினது பெருசில்ல, அதை maintain செய்யுறது எவ்ளோ பெருசு தெரியுமா? புதுசா ஏதாவது கான்செப்ட் சொல்லுங்கன்னு சொன்னா, ஒருத்தன் முறைக்குறான், நீ சிரிக்குற? இன்னும் 3 நாளுல அடுத்த வீடியோ போடணும் தெரியும்ல" என்றான் வெற்றி. "டேய் வெற்றி, ஏன்டா கதறுற? நாம என்ன டிவி சீரியலா எடுக்குறோம். கரெக்டா வாரா வாரம் ஒரு எபிசோட் போடுறதுக்கு. எப்ப எடுக்குறோமோ, அப்பவே YouTubeல upload செய்யப்போறோம். அதை subscriber எப்ப வேணும்னாலும் பாத்துக்கப் போறாங்க, ஆனா, கான்செப்ட் புடிக்கணும்னு ஏதாச்சும் மொக்கையா குடுத்தா, உள்ளவனும் unsubscribe செஞ்சுட்டுப் போயிடுவாங்க" என்ற அகல்யா, சற்று குரலைத் தாழ்த்தி, "என்கிட்ட ஒரு ஐடியா இருக்கு" என்று இழுத்தாள். குமாரும், வெற்றியும் ...