Posts

Showing posts from October, 2016

திக்குதல் விழிப்புணர்வு நாள் - Stuttering Awareness Day

Image
ஒருவர் கூற வரும் கருத்தை விட அதை எவ்விதம் கூறுகிறார் என்பதைக் கூர்ந்து கவனிக்கும் உலகத்தில் தான் நாம் இன்று வாழ்ந்து வருகிறோம். ஒருவர் உளவியல் ரீதியாகவோ, உடல் ரீதியாகவோ தான் கூற வேண்டிய வார்த்தைகளை விழுங்கியோ, திக்கியோ சொல்வதை கேலி செய்தும், அவர் மனம் புண்படுவதைக் கண்டு மகிழ்ந்தும் இருக்கிறோம். இதை விடக் கொடுமையானது என்னவென்றால், இவ்வாறு அவரின் குறையை எள்ளி நகையாடுவது அவர் தன்னைத் திருத்திக் கொள்வதற்கே, அவர் நலனுக்கே எனக் கூறிக் கொள்வது. உலக திக்குவாய் விழிப்புணர்வு தினம் (22 அக்டோபர்)  இந்த திக்குவாய் பிரச்சினை என்பது, வார்த்தைகளின் முதலில் சிரமப்பட்டு ஆரம்பிப்பது, சொற்றொடரின் நடுவே விட்டு விட்டு பேசுவது, தேவையில்லாமல் சில சொற்களைத் திரும்ப திரும்ப சொல்வது, ஒரே சொல்லை சொற்றொடருக்கு நடுவே பலமுறை வேகமாக சொல்வது, பேசும்போது அர்த்தமற்ற அசைகள் (ஒலிகள்) எழுப்புவது (ஆ... ம்ம்... ஹ..), இன்னும் சொல்லிக் கொண்டே போகலாம். நமக்குப் புதிதான மொழியைப் பழகும் போது, நிச்சயம் அனைவரும் திக்கி தான் பேசுவோம். இதற்கு காரணம், நாம் பேசும் போது நமது மொழியில் இருந்து புதிய மொழிக்கு மனதிற்குள் மொழி...

கண்ணதாசன் நினைவு நாள் - In memory of Kannadasan

Image
ஆலங்காய் வெண்ணிலவை  அத்'திக்காய்' காயச் சொன்னவன் எத்திக்கும் தன் பாடல்களை மட்டும் விட்டுவிட்டு சென்று விட்டான்...! அர்த்தமுள்ள இந்துமதம் போல் இயேசு காவியமும் படைத்தவன் தானே காவியமாய் மாறிப் போனான்...! எங்கேயும் எப்போதும்  சங்கீதம் சந்தோஷம்  எனச் சொன்னவன்  சடுதியில்  நம்மை துக்கத்தில்  விட்டுப் போனான்...! கண்ணே கலைமானே என ஆராரோ பாடி  நம்மைத் தூங்க வைத்தவன் தானும் தூங்கிப் போனான்...! வாழ நினைத்தால் வாழலாம் என்று சொல்லிவிட்டு ஏனோ வாழ்வைத் துறந்து போனான்...! கவிஞனுக்கு இன்று நினைவு நாள்... கவிஞர் கண்ணதாசன் (24.06.1927 - 17.10.1981)

நுண்கதை : மனசாட்சி - Micro story

Image
சிறிய சங்கேத ஒலியுடன் அனைத்து இருக்கையின் மேலுள்ள 'சீட் பெல்ட்' விளக்கு எரிந்தது. சென்னையை நோக்கி சென்று கொண்டிருந்த ஏர் இந்தியா விமானம் தரையிறங்கும் நேரம் சுந்தர் ஜன்னலின் வழி ஒரு வருடமாய் பிரிந்திருந்த தன் நாட்டைப் பார்த்தபடி அமர்ந்திருந்தான்.  ஏர் ஹோஸ்டஸ் அனைவரும் சீட் பெல்ட் அணிந்துள்ளனரா, சீட் நேராக உள்ளதா என சோதித்து விட்டு, தன் இருக்கையில் அமர்ந்தாள். சுந்தரின் முன்னே அமர்ந்திருந்தவர் மீண்டும் தன் சீட் புஷ்பேக்கை பின் தள்ளிவிட்டு அமர்ந்தார். சுந்தர் "சீட் ஸ்ட்ரெயிட்டா வைங்க..." எனக் கூற, முன்னிருக்கை ஆசாமி தன் காதில் விழாதது போல் கண்மூடி  தூங்கியபடி இருந்தார் .  வங்காள விரிகுடாவின் மேல் சென்று, சென்னை விமான நிலையம் நோக்கித் திரும்பியது விமானம். அடையாறு, இடிந்த பாலம், ஐஐடி, ரேஸ் கோர்ஸ், கத்திபாரா மேம்பாலம் எல்லாம் பின்னோக்கிப் போக, விமானம் ஓடுபாதையில் நுழைந்தது. லேண்டிங் கியர் ஓடு பாதையில் பட்டு நிலைம விசையில் வேகமாய் ஓடியது விமானம். உடனே, கிளிங் கிளிங்கென ஒத்திசையாய் நூறு ஒலிகள் ஒருங்கே ஒலித்தன. வேறென்ன... சீட்பெல்ட் ஓசை தான். விமானம் ஓடிக்கொண்டிருக்க...

ஜேசன் லூயிஸ் - Jason Lewis

Image
நாம் நினைத்துப் பார்க்கவும் முடியாத விஷயங்களை உலகத்தில் யாரோ சிலர் எங்கோ முயன்று கொண்டுதானிருக்கிறார்கள். உலகத்தை எந்த எரிபொருள் துணையில்லாமல் சுற்றி வருவது சாத்தியமானதா? முயன்றால் முடியாதது இல்லை என்கிறார் ஜேசன் லூயிஸ்.  ஜேசன் லூயிஸ் இங்கிலாந்து நாட்டின் யார்க்‌ஷியர் பகுதியைச் சார்ந்தவர். 13 செப்டம்பர் 1967 அன்று பிறந்த ஜேசன் லூயிஸின் பள்ளிப் பருவம் அனைவரைப் போல சாதாரணமாகவே இருந்தது. இவரின் நண்பர் ஸ்டீவி ஸ்மித் மற்றும் அவரின் தந்தை ஸ்டூவர்ட் ஸ்மித் ஆகியோரின் தூண்டுதல் மற்றும் இயற்கையின் மீது அவர்களின் பார்வை ஜேசனின் உலகைப் புரட்டிப் போடுவதாய் இருந்தது. ஸ்டூவர்ட் ஸ்மித் தனது கனவுப் பயணமான 'பெடல் ஃபார் த பிளானெட்' (Pedal for the Planet) பற்றி ஜேசன் மற்றும் ஸ்டீவியிடம் பேசிய வண்ணம் இருப்பார். இதற்காக நிதி திரட்டவும் ஆரம்பித்திருந்தார் ஸ்டூவர்ட். பின்னாளில் அந்த நிதியே ஜேசனின் பயணமான 'எக்ஸ்பெடிஷன் 360' (Expedition 360)க்கு ஆதாரமாக அமைந்தது.  ஜேசன் லூயிஸ்  12 ஜூலை 1994ல் நண்பன் ஸ்டீவியுடன் இந்தப் பயணத்தை ஆரம்பித்திருந்தார் ஜேசன் லூயிஸ். பயணத்தில் ஒரே விதிதான் : ...

சிறுகதை 3 கண்ணாடி - Short Story 3 Mirror

Image
யாரும் கவனிக்கவில்லை என நாம் செய்யும் தவறுகளை யாரோ கவனித்துக் கொண்டு தான் இருக்கிறார்கள் -யாரோ “வணக்கம்...” நான் திரும்பி சுற்றிலும் பார்த்தேன். மின்னேற்றியில் என்னைத் தவிர யாரும் இல்லை. பயந்தவாறே நான் செல்ல வேண்டிய 6வது தளத்தின் எண்ணை அழுத்துவதற்கு முன்.... “என்னடா யாருமே இல்லாம வெறும் சத்தம் வருதுன்னு பாக்குறீங்க? நான் தான் உங்களுக்கு முன்னாடி இருக்க கண்ணாடி பேசுறேன்...” எனக்கு தூக்கி வாரிப் போட்டது... கதவைத் திறக்க முயற்சித்தேன்... சிரிப்பொலி கேட்டது...  “நான் பேயில்ல... ஆவியும் இல்ல... நான் கண்ணாடி... எனக்குத் தெரிவதை அப்படியேக் காட்டும் கண்ணாடி. உண்மை என்பதன் மொத்த உருவம். நான் எதையும் மாற்றுவதும் இல்லை. ஆளுக்குத் தகுந்தாற்போல் மாறுவதும் இல்லை.” எனது யோசிக்கும் திறனை சிறிது நேரம் ‘பாஸ்’ செய்து விட்டு என்னதான் சொல்கிறது கேட்டுப் பார்ப்போம் எனத் தோன்றியது. “சரி சொல்லு... என்ன சொல்லணும்... அதுக்கு முன்னாடி, என்கிட்ட ஏன் சொல்லணும்...?” “நான் பார்த்த சிலரைப் பத்தி சொல்லப் போறேன். உன்ன இங்க நான் பாத்ததில்ல... அதனால உன்கிட்ட சொல்லணும் போல இருந்து...

அன்னி பெசன்ட் - ANNIE BESANT

Image
பெண்ணின் கல்வி எவ்விதம் அவளை மட்டுமல்ல, ஒரு சமுதாயத்தையே மாற்றியமைக்க வல்லது என்பதற்கு ஆகச் சிறந்த சான்றானவர் அன்னி பெசன்ட் அம்மையார். அயர்லாந்து நாட்டைப பூர்வீகமாகக் கொண்ட ஒரு நடுத்தரக் குடும்பத்தில் 1847 ஆம் ஆண்டு பிறந்து - தனது ஐந்து வயதில் தந்தையை இழந்து - தாயாலும் கைவிடப்பட்ட அன்னி வுட்டுக்கு ஆதரவாய் வந்தவர் எல்லன் மேரியட் (Ellen Marriot) எனும் தாயின் தோழியே. வெறும் அடைக்கலம் மட்டும் தராமல், சிறந்தக் கல்வியையும் சேர்த்து அன்னிக்கு அளித்து வளர்த்தார்  ஒரு பெண் தனி மனிதியாய் சமூகத்தில் நேர்மறை பாதிப்புகளை ஏற்படுத்த முடியும் என்றும் அதற்கு சிறந்த கல்வியும் தெளிந்த பார்வையும் அவசியம் என்றும் அன்னிக்கு போதித்தார்  எல்லன். சிறந்த பள்ளிக் கல்வி மட்டுமல்லாது, பல புத்தகங்களின் மூலம் தனது அறிவின் பரப்பை விரிவாக்கிக் கொண்ட அன்னி வுட், தன் பதின்ம வயதின் இறுதிகளில், ஐரோப்பாவின் பல நாடுகளுக்கு சென்று தன் பயண அனுபவங்கள் மூலமும் பல படிப்பினைகளைக் கற்றுக் கொண்டார். புத்தகம் மூலம் உலகத்தையும், பயணம் மூலம் தன்னையும் கண்டறிந்தார் அன்னி வுட். 1867 ஆம் ஆண்டு தனது 20ஆம் வயதில், பிரான்க் பெ...