Posts

எதுவும் மாறல - குறள் கதை

Image
எதுவும் மாறல -முடிவிலி அழகான உள்வடிவமைப்பில் ஆங்காங்கே வைக்கப்பட்டிருந்த நெகிழிச்செடிகள் அந்தக் குளம்பியகத்தைப் பசுமையாகக் காட்டின. மூலையில் இருந்த சோபாவில் அமர்ந்திருந்த மூவரின் முன் ஒரு மடிக்கணினி திறந்திருந்தது. மடிக்கணினிக்கு அருகே இருந்த மூன்று கோப்பைகளில் இருந்த குளம்பியில் ஆவி மெதுவாய் மேலெழும்பிக் கொண்டிருக்க, அவர்கள் அப்படி என்ன பேசிக் கொள்கிறார்கள் என்ற ஆர்வம் அருளுக்கு வந்தது. நான்கு மணிக்குத் தன்னைச் சந்திப்பதாகச் சொல்லியிருந்த கார்த்திகேயனுக்காகக் காத்திருக்கும் அருளின் முன் cafe latteயின் மேல் happy face smiley சிரித்துக் கொண்டிருந்தது. அருள் வந்து காத்திருக்கும் இந்த அரை மணி நேரத்தில் தனக்குக் கூட கேட்காத ஒலியளவில் பேசிக் கண்களால் சிரித்துக் கொண்டிருந்த காதலிணையின் குளிர்க்குளம்பியின் அளவு குறையவே இல்லை. மணி நாலே காலைத் தாண்டியிருந்தது. குளம்பியகத்தின் கதவின் மேல் பொருத்தியிருந்த சிறுமணி குலுங்கி ஒலிக்க, கார்த்திகேயன் உள்ளே நுழைந்து கொண்டிருந்தான்.  கார்த்திகேயனின் முகம் இறுக்கமாக இருந்தாலும், பெருமுயற்சி எடுத்து மையமாகச் சிரித்து, “thanks for meeting me, அருள்" என்...

பிழைப்பு வேட்டை - குறள் கதை

Image
  பிழைப்பு வேட்டை - முடிவிலி மலையின் பாறைகளில் பட்டுத் தெறித்த கதிரொளி , உயர்ந்து வளர்ந்த மரங்களின் கிளைகளிலும் , இலைகளிலும் மோதி நுழைய முயன்று தோற்று காட்டின் தளத்தை அடையும் பொழுது தனது வெப்பத்தை இழந்து தணிந்திருந்தது . மரத்தின் நிழலில் பல செடிகள் , கொடிகள் மண்டிக் கிடப்பது இயற்கை வரைந்த ஓவியமாய் விரிந்திருந்தது . யாரும் பார்க்கா நேரத்தில் தனை மறந்து ஆடுவது போல இதமான காற்றின் போக்கில் உதிர்ந்து விழுந்த இலைகள் நடம்புரிந்து கொண்டிருந்தன . கிளைகளின் உரசும் ஒலி மெல்லிதாக இரைய , ஊடே சீரான இடைவெளியில் முகம் காட்டா மைனாக்களின் குக்கூ காட்டில் எதிரொலித்துக் கொண்டிருந்தது . காற்றில் மெல்ல ஆடும் மரங்களினால் காட்டின் தரையில் ஒளிப்புள்ளி இங்குமங்கும் தாவித் தாவி விளையாடிக் கொண்டிருந்தன . காட்டின் அமைதியைக் குலைக்கும் விதமாக ஒரு காட்டுப்பன்றி ஒன்று இங்குமங்கும் தறிகெட்டு ஓடிக் கொண்டிருந்தது . அதன் பின்னே காட்டுப்பன்றியின் விரைவுக்குச் சற்றும் குறையா வேகத்தில் துரத்திய உருவத்தின் கால்கள் காப்பேறி இறுகிக் கறுத்திருந்தன , இலையால் ஆன ஆடை இடையை மட்டும் மறைக்க , மறையாப் பகுதிகளில் மயிர் மண்டியிருந்த...

இதுக்காடா...? - குறள் கதை

Image
  இதுக்காடா...? - முடிவிலி “எழுந்திருடா, சரவணா , மணி எத்தனை ஆகுது பாரு” என்ற அம்மாவின் சொற்களைக் காதில் வாங்கியும் வாங்காதது போல தூங்கிக் கொண்டிருந்தான் சரவணன். சென்னையில் pix fx எனும் நிறுவனத்தில் வேலை பார்த்து வரும் சரவணன், விடுமுறைக்கு ஊருக்கு வந்தால் இப்படித்தான் தூங்குவான்னு அம்மாவுக்கும் தெரிந்து தான் இருந்தது. பத்து நிமிடங்கள் கழித்து, “எழுந்திருடா சரவணா” என்ற அம்மா, அவனது கட்டிலின் அருகில் காபிக் கோப்பையையும் வைத்தார். போர்வையை மட்டும் மெல்ல விலக்கி, காபிக் கோப்பையை எடுக்கப் போன சரவணனின் கையைப் பிடித்து , “எழுந்து போயிப் பல்ல விளக்குடா” என்று அம்மா சொல்ல, “லீவு தானம்மா” என்று சிணுங்கிக் கொண்டே எழுந்தான் சரவணன். சற்று நேரத்தில் சுடச்சுட அம்மாவின் கையால் மொறு மொறு தோசையும் , புதினாத் துவையலும் சேர்ந்து அவனது பசியைக் கூட்ட, எத்தனை தோசை என்ற கணக்கில்லாமல் உள்ளே சென்று கொண்டிருந்தது. “அம்மா , ஊருல வேற என்ன நடக்குது ? ” “இந்த ஊருல என்னடா நடந்துடப் போகுது. இது என்ன சென்னையா ? சொல்றதுக்கு ஒன்னு இருக்கு. ஆனா , அவன் பேரைக் கேட்டாலே உனக்குப் புடிக்காதுன்னு தான் எதுவு...

இஞ்சினியர் வீடு - குறள் கதை

Image
இஞ்சினியர் வீடு - முடிவிலி கோ வையில் கிளம்பியிருந்த கோவை - சென்னை எழும்பூர் விரைவு வண்டி திருச்சியைத் தாண்டி தஞ்சாவூர் நோக்கி விரைந்து கொண்டிருந்தது. 2 Tier AC பெட்டியில் தனது மனைவியுடன் பின்னோக்கிச் செல்லும் மரங்களைப் பார்த்தபடி அமர்ந்திருந்தார், மின்  வாரியத்தில் மேற்பார்வை பொறியாளராகப் பணிபுரிந்து ஒய்வு பெற்று தனது ஊருக்குத் திரும்பிக் கொண்டிருக்கும் செல்வநாதன்.  என்ன தான் வருடம் ஒருமுறை விடுமுறைக்கு வந்து செல்வதென இருந்திருந்தாலும், இப்போது அங்கேயே தங்கப் போவதை எண்ணி மிகவும் நெகிழ்ந்து போயிருந்தார். இதுவரை அனல்மின் நிலையங்கள், புனல் மின் நிலையங்கள், நடுவே ஓராண்டு மின் பகிர்மானத்திலும் பணிபுரிந்து தமிழ்நாட்டின் பல ஊர்களிலும் இருந்து வெகு நாட்களுக்குப் பிறகு தான் பிறந்த ஊரிலேயே தங்கப் போவதை எண்ணிய அவரின் நினைவுகள் நாற்பது ஆண்டுகள் தாண்டிச் சென்று கொண்டிருந்தது.  **** அ ன்று பிரிக்கப்படாத தஞ்சை மாவட்டத்தின் கடற்கரை நகராக, டேனிஷ் கோட்டையும், கடற்கரைக் கோவிலும் கடலின் அருகே நின்றிருந்த தரங்கம்பாடி அருகே இருந்தது செல்வநாதனின் ஊர். காரைக்காலையும், பாண்டிச்சேரியையும் இணைக்கு...