Posts

சிறுகதை 3 : கோடுகள் - Short Story 3 Lines

Image
14-12-2003 என்று காட்டிக்கொண்டு மின்விசிறி காற்றில் ஆடிக்கொண்டிருந்த காலண்டர் தாளுக்கு மேலே முருகனும் பிள்ளையாரும் தோள் மேல் கைப் போட்டுக் கொண்டு சிரித்துக் கொண்டிருந்தனர். அவர்கள் சிரிப்பைக் கண்டு மேலும் சோகமாய் அமர்ந்திருந்தான் சுந்தர். உற்சாகமாய் கூப்பிட்டுக் கொண்டே உள்ளே வந்தார் அப்பா. "சுந்தர், இண்டர்வியூக்கு லெட்டர் வந்திருக்குடா..." உள்ளே மகிழ்ந்தாலும், வெளியே காட்டிக் கொள்ளாமல் "எந்த இண்டர்வியூப்பா...?" என்றான் சுந்தர். "கத்தார் எலெக்ட்ரிசிடிக்குடா... இன்னும் மூணு நாளுல இண்டர்வியூ... மும்பையில..." சுந்தருக்கு நான்கு மாதம் முன்பு செய்தித்தாள் பார்த்து, கத்தார் எலக்ட்ரிசிடிக்கு அப்ளை பண்ணியதை மறந்தே போயிருந்தான்.  "மூணு நாள்லயா... எப்படி போறதுப்பா...?" "கிளம்புடா... உடனே ஸ்டேஷன் போயி டிக்கெட் புக் பண்ணிட்டு வாடா... சீக்கிரம்...." அப்பாவிடம் பணம் வாங்கிக் கொண்டு, சென்ட்ரலுக்குக் கிளம்பினான் சுந்தர்.  உற்சாகமாய் சென்ற சுந்தர், துவண்டு போய்த் திரும்பி வந்தான். அப்பா "என்ன ஆச்சுடா? டிக்கெட் கிடைச்சுதா?" ...

டைட்டானிக் : கர்பாத்தியாவும், கலிபோர்னியனும் - Titanic : Carpathia & Californian

Image
டைட்டானிக் - இதைப்பற்றி அனைவருக்கும் தெரிந்திருக்கக்கூடும். என்னதான் உருவத்திலும், தொழில்நுட்பத்திலும் பெரிதாய் இருந்தாலும், இயற்கையின் முன் அனைத்தும் சிறிதே என நிரூபித்தது டைட்டானிக்கின் பேரழிவும், உயிரிழப்புக்களும். அழகைக் குறைக்கிறது எனக் குறைந்த உயிர்ப்படகுகளைக் கொண்டு துவங்கிய டைட்டானிக்கின் முதல் பயணமே கடைசியாகவும் இருந்தது அனைவரும் அறிந்ததே. 2220 பேசுமார் 1200 பேர் செல்லக்கூடிய உயிர்ப்படகுகள் இருந்தும், 705 பேரேக் காப்பாற்றப்பட்டனர். டைட்டானிக்  டைட்டானிக் பனிப்பாறையில் மோதிய நாளன்று, அவ்வழியில் அருகே இருந்த இருக் கப்பல்களின் பார்வையிலேயே இந்தப் பதிவு.  கர்பாத்தியா: டைட்டானிக் பனிப்பாறையில் மோதிய போது தரப்பட்ட அபாய சமிக்ஞையை (Distress Signal) மதித்து காப்பாற்ற ஓடோடி வந்தது கர்பாத்தியா. நியூயார்க் நகரத்தில் இருந்து ஆஸ்திரிய ஹங்கேரி நாட்டின் ஃபியூமி நகரம் நோக்கிப் புறப்பட்டது கர்பாத்தியா, 14 ஏப்ரல் 1912 அன்று. கர்பாத்தியாவின் கம்பியில்லா வானொலி தொடர்பாளர் (Wireless Operator) ஹெரால்ட் டைட்டானிக் பனிப்பாறையில் மோதியதும் தந்த சமிக்ஞைகளைக் கவனிக்கவில்லை. பின்...

விண்ணை நோக்கி 2 - Into the sky 2

Image
துருவ செயற்கைக்கோள் செலுத்து ஊர்தியின் (Polar Satellite Launching Vehicle) 37வது பயணம் நாளை காலை 9:07 மணிக்குத் துவங்க உள்ளது. PSLV-C35 எனும் விண்ணூர்தி இம்முறை SCATSAT-1 என்ற செயற்கைக்கோளை முதன்மைச் சுமையாக சுமந்து செல்ல உள்ளது. இதனுடன் 7 சிறிய செயற்கைக்கோள்களையும் உடன் செல்ல உள்ளது PSLV-C35. ஸ்ரீஹரிக்கோட்டா செலுத்து தளம் ஒன்றில் தயார் நிலையில் PSLV-C35 PSLV - Polar Satellite Launching Vehicle துருவ செயற்கைக்கோள் செலுத்து ஊர்தி. இது தன்னுடன் எடுத்து செல்லும் செயற்கைக்கோளை சூரிய ஒத்திசைவு வட்டப்பாதையில் (Sun Synchronous Orbit) செலுத்த வல்லது. இம்முறை இன்னும் சிறப்பாக, முதன் முறையாக PSLV-C35 இரு வெவ்வேறு உயரங்களில் (Altitude) செயற்கைக்கோள்களை நிறுவ உள்ளது. நான்கு நிலை இயந்திரங்கள் கொண்ட இந்த விண்ணூர்தி, 44.4மீ உயரமும், 320டன் எடையும் கொண்டது. முதல் நிலை மற்றும் மூன்றாம் நிலை இயந்திரங்கள் திட எரிபொருள் கொண்டும், இரண்டாம் நிலை மற்றும் நான்காம் நிலை இயந்திரங்கள் திரவ எரிபொருள் கொண்டும் இயங்கும் வண்ணம் வடிவமைக்கப்பட்டுள்ளது PSLV-C35.  371கிலோ எடை கொண்ட SCATSAT-1 செயற்கைக்...

மகேஷ் புன்னகையால் அழவைத்தவன் - Mahesh

Image
எனது வலைப்பக்கத்தில் திரைப்படம் குறித்து முற்றிலும் தவிர்த்து விடலாம் என்று எண்ணியதுண்டு. ஆனால், சினிமாவிலும், வாழ்விலும் தன் முத்திரை பதித்த சிலரின் திறமைகளை சரிவர அங்கீகரிக்காமல் மறக்கப்பட்டவர்களில் ஒருவரை நினைத்துக் கொள்ளவே இந்தப் பதிவு. ' சொட்டு நீலம் டோய்... ரீகல் சொட்டு நீலம் டோய்...' இந்த விளம்பரம் எத்தனை பேருக்கு தங்கள் சிறுவயதை நினைவூட்டக் கூடியது? ஒளியும் ஒலியும் ஓடிக்கொண்டிருக்கும் போது, பாடல் முடிந்து விளம்பர இடைவெளியில் இந்த விளம்பரம் வரும்போது கூடவே நானும் பாடி இருக்கிறேன். அன்று எனக்குத் தெரியாது, இந்த விளம்பரம் மட்டுமல்லாது பல விளம்பரங்களுக்கு இசையமைத்தது மகேஷ் என்பது... மகேஷ் - இசையமைப்பாளர் 1955 ஆம் ஆண்டு பிறந்த மகேஷ் சிறுவயதில் இருந்தே இசையில் ஆர்வம் கொனவராக இருந்தார். பின்னர், XLRI கல்லூரியில் மேலாண்மை பயின்ற மகேஷ், ஹிந்துஸ்தான் பாலிமர்ஸ், இந்தியா பிஸ்டன்ஸ் போன்ற நிறுவனங்களின் மேலாளராகப் பணி புரிந்துள்ளார். 80களின் இறுதியில், ரத்தப் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட மகேஷ், தனது சிறுவயது நண்பன் ஜெயேந்திராவின் தூண்டுதலால் தனது பாதையை இசையின் பக்கம் ...

அசோகமித்திரனுக்குப் பிறந்தநாள் - Ashokamithran's Birthday

Image
தன் எழுத்தைக் கொண்டு சிறந்த கதைகளைச் சொல்லி, உலக அளவில் தமிழ் இலக்கியத்தைக் கொண்டு சேர்த்த அசோகமித்திரனுக்கு இன்று 85 ஆம் பிறந்தநாள். அசோகமித்திரன்  1931 ஆம் வருடம் செப்டம்பர் 22 அன்று செகந்திராபாத்தில் பிறந்தார் தியாகராஜனாக. 1952 வரை, அங்கு வசித்த தியாகராஜன், தன் தந்தையின் மறைவுக்குப் பிறகு, சென்னைக்கு வந்தார். பத்தாண்டுகளுக்கு மேலாக சென்னை ஜெமினி ஸ்டூடியோவில் பணிபுரிந்து வந்தார். அங்கு அவருக்கு கிடைத்த நண்பர்கள், எழுத்தாளர்கள் ஆகியோரின் நட்பு அவரையும் எழுத வைத்தது. 1953 ல் அவர் எழுதிய அன்பின் பரிசு நாடகம் பல பரிசுகளை பெற்றுத் தந்தது. 1966 முதல் எழுத்தையே தன் பணியாகக் கருதி முழுநேர எழுத்தாளனாக மாறிய தியாகராஜன், தன் பெயரையும் அசோகமித்திரன் என மாற்றிக் கொண்டார்.  மைய நீரோட்டமாய் எள்ளலும், நகைச்சுவையும் கொண்ட நடையும், எளிய மக்களின் வாழ்க்கை நிலையைத் தெளிவாக எடுத்துச் சொல்லும் திறனும் ஒருங்கே அமையப்பெற்றது அசோகமித்திரனின் எழுத்துக்கள். இவர் எழுதிய நாவல்கள், குறுநாவல்கள் மற்றும் சிறுகதை தொகுப்புகள் தமிழில் மட்டுமல்ல ஆங்கிலத்திலும் மொழிபெயர்க்கப்பட்டு உலகளாவிய ஆங்கீகார...

கமக்குராவின் பெரிய புத்தர் - The Great Buddha of Kamakura

Image
The Great Buddha of Kamakura இன்றைய பதிவு 518 வருடங்களுக்கு முன், இதே நாளில் ஒரு இயற்கை சீற்றத்தால் தானிருந்த மண்டபம் இழந்து வெட்டவெளியில் வந்தும், இன்றும் மாறாமல் அமைதியாய் இருக்கும் கமக்குராவின் பெரிய புத்தர் சிலையைப் பற்றியது.  ஜப்பானில் உள்ள கமக்குரா (Kamakura) எனும் ஊரில் கொட்டுக்கு இன் (Kotuku In) எனும் கோவிலில் உள்ளது டாய்புத்ஸூ (Daibutsu) என்று ஜப்பானியரால் அழைக்கப்படும் பெரிய புத்தர் சிலை. 1233 ஆம் ஆண்டு மரத்தால் ஆன பெரிய புத்தர் சிலை அமைக்க முடிவெடுக்கப் பட்டது. புத்தத் துறவி ஜோக்கோ (Joko) மற்றும் இனாடா (Inada) போன்றோர் தலைமையில் பத்தாண்டுகள் கடும் உழைப்பு மற்றும் பொருட்செலவில் 1243 ஆம் ஆண்டு சிலை அமைக்கப்பட்டது. சிலையைச் சுற்றிலும் மரத்தாலான மண்டபமும் அமைக்கப்பட்டது. 1248 ஆம் ஆண்டு ஜப்பானில் அடித்த பெரும் புயலில் மண்டபமும், புத்தர் சிலையும் சேதம் அடைந்தன. பெரிதும் மனமுடைந்த ஜோக்கோ, மரத்தாலான புத்தர் சிலை இருந்த அதே இடத்தில், இயற்கைப் பேரிடரால் பாதிக்காத வண்ணம் வெண்கலத்தால் ஆன பெரிய புத்தர் சிலை நிறுவ விருப்பம் தெரிவித்தார். பெரும் நிதி திரட்டப்பட்டது. உடன் வேலை...

நீதிக்கதைகள் - Moral Stories

Image
நேரடியாக உபதேசம், அறிவுரை என்ற பெயரில் கூறப்படும் உண்மைகள் பலருக்கும் சென்றடைவதில்லை. அதையே, கதையில் ஏற்றிக் கூறப்படும் போது, அதன் வீச்சு பலமிக்கதாக இருக்கும். பெரும்பாலும், சிறுவர்களுக்காக கூறப்படும் இந்த நீதிக்கதைகள், எல்லா வயதினருக்கும் பொருந்துவதாகவே இருக்கும். நான் இன்று இருக்கும் நிலைக்கு நான் கேட்ட பல கதைகளும் ஒரு காரணம் என்பதை மறுப்பதற்கில்லை. ஒரு விஷயத்தைக் கேட்டதும், 'ஆராயாமல் நம்பாதே... உனக்குள் கேள்வி கேள்...' எனச் சொல்லிக் கொடுத்ததும் இவ்வகை கதைகள் தான். நான் மேலேக் கூறியது போல் கதைகள் கேட்டது தான் அதிகம், படித்ததை விட. என் தந்தை தான் படிக்கும் கதைகளை வீட்டில் உள்ள அனைவரும் கேட்குமாறு சத்தமிட்டு படிப்பார். பெரும்பாலும், ராமாயணம், பாரதம், விவிலியம் (பைபிள்) போன்ற கதைகள் தான். அவற்றின் கிளைக்கதைகளில் உள்ள அர்த்தங்களை விவரித்துக் கூறுவதில் என் தந்தைக்கு இணை அவரே. என் தந்தைக் கூறிய பலக் கதைகள் ஞாபகமிருந்தாலும், என் மனதிற்கு நெருக்கமான ஒரு கதையை இங்கே பகிர்ந்து கொள்ள விழைகிறேன். கதை இதோ...! எங்கே...? ஒரு அரசன் வேட்டைக்காகத் தன் படை சூழ காட்டுக்குச் சென்றான...