Posts

மகேஷ் புன்னகையால் அழவைத்தவன் - Mahesh

Image
எனது வலைப்பக்கத்தில் திரைப்படம் குறித்து முற்றிலும் தவிர்த்து விடலாம் என்று எண்ணியதுண்டு. ஆனால், சினிமாவிலும், வாழ்விலும் தன் முத்திரை பதித்த சிலரின் திறமைகளை சரிவர அங்கீகரிக்காமல் மறக்கப்பட்டவர்களில் ஒருவரை நினைத்துக் கொள்ளவே இந்தப் பதிவு. ' சொட்டு நீலம் டோய்... ரீகல் சொட்டு நீலம் டோய்...' இந்த விளம்பரம் எத்தனை பேருக்கு தங்கள் சிறுவயதை நினைவூட்டக் கூடியது? ஒளியும் ஒலியும் ஓடிக்கொண்டிருக்கும் போது, பாடல் முடிந்து விளம்பர இடைவெளியில் இந்த விளம்பரம் வரும்போது கூடவே நானும் பாடி இருக்கிறேன். அன்று எனக்குத் தெரியாது, இந்த விளம்பரம் மட்டுமல்லாது பல விளம்பரங்களுக்கு இசையமைத்தது மகேஷ் என்பது... மகேஷ் - இசையமைப்பாளர் 1955 ஆம் ஆண்டு பிறந்த மகேஷ் சிறுவயதில் இருந்தே இசையில் ஆர்வம் கொனவராக இருந்தார். பின்னர், XLRI கல்லூரியில் மேலாண்மை பயின்ற மகேஷ், ஹிந்துஸ்தான் பாலிமர்ஸ், இந்தியா பிஸ்டன்ஸ் போன்ற நிறுவனங்களின் மேலாளராகப் பணி புரிந்துள்ளார். 80களின் இறுதியில், ரத்தப் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட மகேஷ், தனது சிறுவயது நண்பன் ஜெயேந்திராவின் தூண்டுதலால் தனது பாதையை இசையின் பக்கம் ...

அசோகமித்திரனுக்குப் பிறந்தநாள் - Ashokamithran's Birthday

Image
தன் எழுத்தைக் கொண்டு சிறந்த கதைகளைச் சொல்லி, உலக அளவில் தமிழ் இலக்கியத்தைக் கொண்டு சேர்த்த அசோகமித்திரனுக்கு இன்று 85 ஆம் பிறந்தநாள். அசோகமித்திரன்  1931 ஆம் வருடம் செப்டம்பர் 22 அன்று செகந்திராபாத்தில் பிறந்தார் தியாகராஜனாக. 1952 வரை, அங்கு வசித்த தியாகராஜன், தன் தந்தையின் மறைவுக்குப் பிறகு, சென்னைக்கு வந்தார். பத்தாண்டுகளுக்கு மேலாக சென்னை ஜெமினி ஸ்டூடியோவில் பணிபுரிந்து வந்தார். அங்கு அவருக்கு கிடைத்த நண்பர்கள், எழுத்தாளர்கள் ஆகியோரின் நட்பு அவரையும் எழுத வைத்தது. 1953 ல் அவர் எழுதிய அன்பின் பரிசு நாடகம் பல பரிசுகளை பெற்றுத் தந்தது. 1966 முதல் எழுத்தையே தன் பணியாகக் கருதி முழுநேர எழுத்தாளனாக மாறிய தியாகராஜன், தன் பெயரையும் அசோகமித்திரன் என மாற்றிக் கொண்டார்.  மைய நீரோட்டமாய் எள்ளலும், நகைச்சுவையும் கொண்ட நடையும், எளிய மக்களின் வாழ்க்கை நிலையைத் தெளிவாக எடுத்துச் சொல்லும் திறனும் ஒருங்கே அமையப்பெற்றது அசோகமித்திரனின் எழுத்துக்கள். இவர் எழுதிய நாவல்கள், குறுநாவல்கள் மற்றும் சிறுகதை தொகுப்புகள் தமிழில் மட்டுமல்ல ஆங்கிலத்திலும் மொழிபெயர்க்கப்பட்டு உலகளாவிய ஆங்கீகார...

கமக்குராவின் பெரிய புத்தர் - The Great Buddha of Kamakura

Image
The Great Buddha of Kamakura இன்றைய பதிவு 518 வருடங்களுக்கு முன், இதே நாளில் ஒரு இயற்கை சீற்றத்தால் தானிருந்த மண்டபம் இழந்து வெட்டவெளியில் வந்தும், இன்றும் மாறாமல் அமைதியாய் இருக்கும் கமக்குராவின் பெரிய புத்தர் சிலையைப் பற்றியது.  ஜப்பானில் உள்ள கமக்குரா (Kamakura) எனும் ஊரில் கொட்டுக்கு இன் (Kotuku In) எனும் கோவிலில் உள்ளது டாய்புத்ஸூ (Daibutsu) என்று ஜப்பானியரால் அழைக்கப்படும் பெரிய புத்தர் சிலை. 1233 ஆம் ஆண்டு மரத்தால் ஆன பெரிய புத்தர் சிலை அமைக்க முடிவெடுக்கப் பட்டது. புத்தத் துறவி ஜோக்கோ (Joko) மற்றும் இனாடா (Inada) போன்றோர் தலைமையில் பத்தாண்டுகள் கடும் உழைப்பு மற்றும் பொருட்செலவில் 1243 ஆம் ஆண்டு சிலை அமைக்கப்பட்டது. சிலையைச் சுற்றிலும் மரத்தாலான மண்டபமும் அமைக்கப்பட்டது. 1248 ஆம் ஆண்டு ஜப்பானில் அடித்த பெரும் புயலில் மண்டபமும், புத்தர் சிலையும் சேதம் அடைந்தன. பெரிதும் மனமுடைந்த ஜோக்கோ, மரத்தாலான புத்தர் சிலை இருந்த அதே இடத்தில், இயற்கைப் பேரிடரால் பாதிக்காத வண்ணம் வெண்கலத்தால் ஆன பெரிய புத்தர் சிலை நிறுவ விருப்பம் தெரிவித்தார். பெரும் நிதி திரட்டப்பட்டது. உடன் வேலை...

நீதிக்கதைகள் - Moral Stories

Image
நேரடியாக உபதேசம், அறிவுரை என்ற பெயரில் கூறப்படும் உண்மைகள் பலருக்கும் சென்றடைவதில்லை. அதையே, கதையில் ஏற்றிக் கூறப்படும் போது, அதன் வீச்சு பலமிக்கதாக இருக்கும். பெரும்பாலும், சிறுவர்களுக்காக கூறப்படும் இந்த நீதிக்கதைகள், எல்லா வயதினருக்கும் பொருந்துவதாகவே இருக்கும். நான் இன்று இருக்கும் நிலைக்கு நான் கேட்ட பல கதைகளும் ஒரு காரணம் என்பதை மறுப்பதற்கில்லை. ஒரு விஷயத்தைக் கேட்டதும், 'ஆராயாமல் நம்பாதே... உனக்குள் கேள்வி கேள்...' எனச் சொல்லிக் கொடுத்ததும் இவ்வகை கதைகள் தான். நான் மேலேக் கூறியது போல் கதைகள் கேட்டது தான் அதிகம், படித்ததை விட. என் தந்தை தான் படிக்கும் கதைகளை வீட்டில் உள்ள அனைவரும் கேட்குமாறு சத்தமிட்டு படிப்பார். பெரும்பாலும், ராமாயணம், பாரதம், விவிலியம் (பைபிள்) போன்ற கதைகள் தான். அவற்றின் கிளைக்கதைகளில் உள்ள அர்த்தங்களை விவரித்துக் கூறுவதில் என் தந்தைக்கு இணை அவரே. என் தந்தைக் கூறிய பலக் கதைகள் ஞாபகமிருந்தாலும், என் மனதிற்கு நெருக்கமான ஒரு கதையை இங்கே பகிர்ந்து கொள்ள விழைகிறேன். கதை இதோ...! எங்கே...? ஒரு அரசன் வேட்டைக்காகத் தன் படை சூழ காட்டுக்குச் சென்றான...

சிறுகதை 2: ஒண்ணுமில்லை - Nothing - Short Story

Image
ஒண்ணுமில்லை  - கணபதிராமன் யாழினி, தன் வீட்டு வேலைகளை முடித்து விட்டு ஹாலில் வந்து அமர்ந்தாள். ஜீவா தனது பள்ளி வீட்டு வேலை செய்து முடித்து யாழினியிடம் காட்டினான்.  நாட்குறிப்பில் எழுதியிருந்த கேள்வியையும், செய்திருந்த ஹோம் ஒர்க்கையும் சரிபார்த்த யாழினி, 'பையன் படிக்கிறதுக்கு நானும் சேர்ந்து படிக்க வேண்டியதா இருக்கு... மூணாம் கிளாஸ்னு சொல்றாங்க... ஒண்ணும் புரியல...' என மனதிற்குள் நினைத்து பெருமூச்சு விட்டாள். ஜீவா "என்னம்மா...?" எனக் கேட்டான். "ஒண்ணுமில்லடா" எனக் கூறிய யாழினிக்கு, ஏற்கனவே ஒருமுறை ஜீவா "என்னம்மா... இதுகூட உனக்குத் தெரியாதா?" எனக் கூறியது நியாபகம் வந்து போனது. "எல்லாம் ரைட்டா இருக்குடா. இவ்ளோதான் ஹோம் ஒர்க்கா? வேற எதாச்சும் இருக்கா...?" என்ற யாழினியைப் பார்த்து ஜீவா "அதான் டைரில எழுதி இருக்கே... வேற ஒண்ணும் இல்ல..." என்றான் அலட்சியமாக. யாழினி டிவி ரிமோட்டை எடுத்து முப்பத்திரண்டு இன்ச் வண்ணத்திரைக்கு உயிர் கொடுத்தாள். சேனல் மாற்றிக் கொண்டே வந்தவளிடம் "டிஸ்கவரி கிட்ஸ் சேனல் வைம்மா... மிஸ...

சிறுகதை 1 அலார்ம் - Alarm - Short story

Image
அலார்ம் - கணபதிராமன் டி ட்டி ட்டி ட்டின்.... டி ட்டி ட்டி ட்டின்....!!! அலாரம் சத்தம் கேட்டு விழித்த யாழினி சுற்றுமுற்றும் பார்த்தாள். ஐந்து வயதே ஆன தனது மகன் ஜீவா அழகாய் யானை பொம்மையை அணைத்தபடி தூங்கிக் கொண்டிருந்தான். அலாரத்தை நிறுத்திவிட்டு, ஜீவாவின் நெற்றியில் சின்னதாய் முத்தமிட்டு மெல்லிதாய் சிரித்தாள் யாழினி. 'சுந்தர் எங்க' என எண்ணிய வண்ணம் அறையை விட்டு வெளியே வந்தவள், சமையலறையில் இருந்து சத்தம் கேட்க, அங்கே சென்றாள்.  முகத்தில் புன்னகை - கையில் சூடான காபியுடன் "குட் மார்னிங்" என்றான் சுந்தர். "என்ன இது காலையிலேயே... நான் எழுந்து காபி போட்டிருப்பேன்ல...?" "தினமும் நீதான எல்லா வேலையும் செய்யுற... இன்னிக்கு ஒரு நாள் நான் செய்யுறேன்..." "நீ முதல்ல நகரு..." என்றவாறே தன் சாம்ராஜ்யத்தைத் தக்கவைக்க முயன்ற யாழினியை தடுத்து "நீ போயி ஹால்ல உட்காரு. டிவி பாரு. சமையல் வேலைய நான் பாத்துக்கிறேன்." என்றான் சுந்தர். சமையலறையில் நின்ற சுந்தரைப் பின்னாலிருந்து அணைத்து - தன் பக்கம் திருப்பி - நிறைவாய் ஒரு ப...

மரண ரயில்பாதை - Death Railway

Image
இரண்டாம் உலகப்போர். இதைக் கேட்கும் போது அனைவருக்கும் நினைவுக்கு வருவது ஹிட்லரின் கொடூரங்களும், ஐரோப்பாவின் பல பகுதிகளில் ஜெர்மனி நிகழ்த்திய ஹோலோகாஸ்ட் படுகொலைகளும் தான். அங்கு மட்டும் தான் அவ்வாறு நடந்ததா? நம் இந்தியாவிற்கு மிக அருகில், போருக்கு சற்றும் தொடர்பில்லா சுமார் 1,00,000 பேரைப் பலி வாங்கியது இந்த இரண்டாம் உலகப்போர். இவர்களின் பிணங்களின் மேல் போடப்பட்டதே மரண ரயில்பாதை. போர் என்பது எவ்வளவு பயங்கரமானது? அதில் இருபுறமும் போரிடுபவர்கள் தங்களுக்குத் தேவையானதை அடைய எத்தனைக் கொடுமைகளை சுலபமாய் நிகழ்த்தி விட்டு செல்கின்றனர்? கொள்கை வேறுபாடு, நாட்டுப் பகை காரணமாக மூளும் போர்களில் வெல்வது யாராய் இருந்தாலும் தோற்பது மனிதத்தன்மையே. உலக அரங்கில் அமைதி விரும்பும் நாடாக தன்னை நிலைநிறுத்திக் கொள்ளும் ஜப்பானும் இதற்கு விதி விலக்கல்ல. இரண்டாம் உலகப் போரின் போது "ஆசியா ஆசியர்களுக்கே" என முழங்கிய ஜப்பான் தெற்காசிய நாடுகளில் ஆங்கிலேய ஆட்சியைக் கைப்பற்றி தனது ஆட்சியை நிறுவ ஆசை கொண்டது. மேம்போக்காக பார்க்கும் போது ஆங்கிலேயர்களிடம் இருந்து விடுதலை வாங்குவது போல் தெரிந்தாலும் இந்த முயற்ச...