குப்பை - குறள் கதை

குப்பை
- முடிவிலி
அழகிய காலைப்பொழுது. peechtree avenueவில் தூய்மையான காற்றும், மரத்திலிருந்து வீழும் இலைகளும் இணைந்து நடைபாதையில் நடனம் புரிந்து கொண்டிருக்க, இவற்றைப் பார்த்தவனாய் எனது காலை நடைபயிற்சியை முடித்து வீட்டுக்குள் வந்து சேர்ந்தேன். 

“வாங்க மாமா, இன்னிக்காவது யார்கூடயாவது பேசுனீங்களா?” என்றாள் என் மருமகள்.

“எங்கம்மா, புது ஊருல, ஆனா தினமும் வாக்கிங் வர்றேன்னு சிலர் parkல சிரிக்கிறாங்க. just smile, அது போதும்.” என்றேன்.

“என்ன மாமா, நீங்க இங்க வந்து மூனு மாசம் ஆகப் போகுது. இன்னமுமா இது புது ஊரு. அதான் சொல்றேன் drivers license எடுங்க. கார் எடுத்துக்கிட்டு ஊரையே சுத்தி வாங்க. புது ஊரு பழைய ஊராகிடும். இந்தாங்க மாமா, coffee எடுத்துக்கோங்க” என்றாள் என் மருமகள்.

“thanks மா” என்றபடி வாங்கிய என்னைப் பார்த்து, புன்னகைத்து, “you are welcome மாமா” என்றாள்.

கையில் வாங்கிய coffeeயிலிருந்து பறக்கும் ஆவி, தமிழ்நாட்டில் வேலை நேரத்தில் எனது மேசையில் வைக்கப்படும் தேநீரை நினைவுபடுத்தியது. பெரும்பாலும், கொண்டு வந்து வைக்கப்படும் தேநீரை அமைதியாகச் சுவைத்துக் குடித்த நாட்களை விட, அவசரமாக உள்ளே கொட்டிக் கொண்டோ, அல்லது பாதி குடித்துவிட்டு மீதியை அப்படியே வைத்திவிட்ட நாட்கள் தான் அதிகம். காவல்துறை வேலை என்றால் அப்படித்தானே. AC அருள்குமரன் என்றால் மக்களின் நடுவில் ஒரு நற்பெயரை எடுத்து வைத்திருந்தேன். மேற்படிப்புக்காக அமெரிக்கா வந்த என் மகன் இங்கேயே நல்ல வேலை கிடைத்து இங்கேயே settle ஆக, வெகு நாட்களாக என்னையும் என் மனைவியையும் அழைத்துக் கொண்டிருந்தான். சில மாதங்கள் முன்பு, புற்றுநோய் என் மனைவியை அழைத்துக் கொள்ள, இன்னும் சில ஆண்டுகள் இருக்கும் serviceக்கு VRS கொடுத்து விட்டு, இதோ ஜார்ஜியா மாநிலம், அட்லாண்டாவில் எனது மருமகளின் coffee குடித்துக் கொண்டிருக்கிறேன். pops என்று செல்லமாக அழைக்கும் எனது பேத்தியின் அன்பு, எனது மனைவியின் இழப்பில் இருந்து சிறிது சிறிதாக மீட்டுக் கொண்டிருந்தது. 

“no mom” என்று தன் அம்மாவுடன் ஏதோ மறுத்துக் கொண்டிருந்தாள் சாரா எனும் தேவதை. என் கையில் இருந்த coffeeயைக் குடித்தபடி, “சாரா, என்னம்மா?” என்றேன்.

“pops, today, i don’t wanna go to school” என்று தன் நுனிநாக்கு அமெரிக்க ஆங்கிலத்தில் கூற, என்ன தான் நன்கு ஆங்கிலம் தெரிந்தவனாக இருந்தாலும், சற்று தடுமாறவே செய்தேன். என் முகத்தில் என்ன பார்த்தாளோ, அடுத்து தட்டுத் தடுமாறி, தமிழில் பேசத் தொடங்கியிருந்தாள் சாரா.

“pops, இன்னிக்கு நான் schoolக்குப் போகல. they'll make fun of me” என்றாள்.

“ஏன்மா கிண்டல் செய்வாங்க, இங்க வா, வந்து தாத்தா பக்கத்துல உட்காரு”

"எல்லாத்துக்கும் இந்த அம்மா தான் reason. last year, அவங்க associationல yoga awareness programனு சொல்லி, schoolல fund collect செய்யச் சொன்னாங்க. நானும் அதோட flyers எல்லாம் குடுத்து, fund collect செஞ்சு குடுத்தேன்."

"நல்லது தானே செஞ்சிருக்க?"

"ம்ம்ம்" என்று பொய்யாக அழுதவள், "அந்த yoga center நடத்துற சாமியாரை நேத்து drug வச்சிருந்தான்னு arrest செஞ்சுட்டாங்க. நேத்து இந்த news தெரிஞ்சதுலேந்து, என்னோட friends எல்லாம் உங்க ஊருக்காரன்னு சொல்லித் தானே இவனுக்காக fund collect செஞ்சன்னு சொல்லி, troll செஞ்சுட்டு இருக்காங்க. இன்னிக்கு schoolக்குப் போனா, இன்னமும் troll செய்வாங்க, நான் இன்னிக்கு schoolக்குப் போகல pops, please" என்றாள் கொஞ்சும் குரலாக.

"யாரும்மா அது?"

"இதோ இவன் தான். bloody moron. பேரு கல்கியானந்தா" என்று தனது திறன்பேசியில் அவனது புகைப்படத்தைக் காட்டினாள். தாடி மீசையோடு ஆடியபடி இருந்த அவனின் படத்தைப் பார்த்தபோது, எங்கோ பார்த்தது போல இருந்தது. 

உள்ளே இருந்து வந்த எனது மருமகள், "மாமா, இவளை விட்டா, இப்படியே பேசிக்கிட்டே இருப்பா, schoolக்கு நேரமாச்சு. கிளம்பச் சொல்லுங்க" என்றாள்.

"pops..." என்று கெஞ்சியபடி என்னைப் பார்த்த சாராவிடம், "troll செய்யுறாங்கன்னு நீ வீட்டுல இருந்தா, அவங்க indirectஆ சொல்றதெல்லாம் சரின்னு ஆகிடாதா? Never run from your problems. face them" என்று சொல்ல, சரியெனத் தலையசைத்துக் கிளம்புவதற்கு உள்ளே சென்றாள்.

"thanks மாமா" என்று சொல்லிவிட்டு நகர்ந்த மருமகளை அழைத்து, "அந்த கல்கியானந்தா பத்தி என்னம்மா தெரியும்?" என்றேன்.

"அவன் இங்க அட்லாண்டாவுல பத்து வருசமா இருக்கான். நாலு வருசம் முன்ன silicon valleyலேந்து இங்க வந்தப்ப, இங்க இருக்க indian associationல இருக்குறவங்க மூலமா தெரியும். நம்ம ஊரு சாமியாருன்னு நெனச்சா, அவன் இந்த வேலை பாத்து வச்சிருக்கான், மாமா, நேத்து சாரா வந்து என்கிட்ட சொன்னப்ப, எனக்கே அதிர்ச்சியா இருந்துச்சு." 

"அவன் பத்து வருசம் முன்ன என்ன செஞ்சுட்டு இருந்தான்னு ஏதும் தெரியுமா?" என்றேன்.

நான் கேட்ட விதத்தைக் கண்ட என் மருமகள், கேட்பது என்னுள் இருக்கும் police என்றறிந்து, "தெரியலையே மாமா, ஏன் கேக்குறீங்க?" என்றாள்.

"ஒரு பத்து வருசம் முன்ன, சென்னையில ஒரு வங்கிக் கொள்ளை நடந்துச்சு, அதை நான் தான் விசாரிச்சேன். நிறைய leads எல்லாம் அந்த bank manager வெங்கடேசன் மேலேயே doubts கிளப்புச்சு. விசாரணை நடந்துட்டு இருக்கும்போதே, அந்த bank manager சென்னையிலேந்து abscond ஆகிட்டான். நல்ல பெரிய amount மா. எனக்கு அவன் தான் இவனோன்னு ஒரு doubt."

"ஒரு முறை association functionல தான் பாத்திருக்கேன். அடிக்கடி, எது எடுக்கப்பட்டதோ, அது இங்கிருந்தே எடுக்கப்பட்டது, ஏன் வருத்தப்படுகிறாய்னு சொல்லிட்டுருப்பாரு." என்றவள், "ச்ச, அவனுக்கு என்ன இருப்பாரு, இருப்பான்" என்றாள்.     

"ஆமா, நாங்க bankல மத்தவங்ககிட்ட விசாரிக்கும் போது, yoga classம் அவன் நடத்திட்டு இருந்திட்டு இருந்தான்னு சொன்னாங்க. அவனோட வேற போட்டோ இருக்காம்மா?" என்றேன்.

சற்று யோசித்தவள், "ஒரு நிமிசம், மாமா" என்று tvக்கு அருகே இருந்த கீதாசாரம் எழுதியிருந்த photo frameல் சிரித்தபடி இருந்த அவனுடைய புகைப்படத்தை என்னிடம் கொடுத்தாள். 

அதைப் பார்த்த நான், "அவனே தான், அந்த case என்னோட serviceல ஒரு blackmark. case அவன் பக்கமா மாறப் போகுதுன்னு தெரிஞ்சதும் எஸ்கேப் ஆகிட்டான்."

"சரி விடுங்க மாமா, அதான் இங்க மாட்டிக்கிட்டான்ல, இவ்ளோ நாள் ஏமாத்திருக்கான்னு தெரிஞ்சதும், நிறைய பேரு அவனுக்கு againstஆ case கொடுத்திருக்காங்க. இங்க அவன் தப்பிக்க முடியாது" என்று என் மருமகள் சொல்லிக் கொண்டிருக்க, பள்ளிக்குச் செல்ல ஆயத்தமாகி வந்த சாரா, "இன்னும் இந்த moron படத்தை வச்சிருக்கீங்களா?" என்று தன் அம்மா கையில் இருந்து படத்தைப் பிடுங்க, "ஏய், என்னடி செய்யப் போற?" என்ற அம்மாவிடம், "It goes to where it belongs" என்றபடி backyard வாசலில் வைத்திருந்த குப்பைத் தொட்டியை நோக்கி நடந்தாள்.  

அளவல்ல செய்தாங்கே வீவர் களவல்ல
மற்றவை தேற்றா தவர்.
அதிகாரம்: கள்ளாமை
இயல்: துறவறவியல்
குறள் எண்: 289

களவு தவிர மற்ற நல்லவழிகளைத் தேடாதவர்கள், வரம்பு கடந்த செயல்களால் கிடைத்த வாழ்வினை இழந்து வீழ்வர்
     

Comments

Popular posts from this blog

அகர முதல - சிறுகதை (திருக்குறள் கதை) குறள் 0001

புறநானூறு பேசும் நீர் மேலாண்மை

வான்கா - Vanka