ஞானக்கூத்தனுக்கு அஞ்சலி
ஞானக்கூத்தனுக்கு அஞ்சலி
ஞானக்கூத்தன் (அக்டோபர் 7 1938 - ஜூலை 28, 2016)
இந்த சமுதாயம் அவனிடமிருந்து
வரவேண்டிய பல படைப்புகளை இழக்கிறது...
இறந்தவர்க்கு நாம் செய்யவேண்டியது
அவர் தந்த படைப்புகளையும்
இழக்காமல் இருப்பதே...
படிப்போம்... ஒருமுறையேனும்...!
- கணபதிராமன்
ஞானக்கூத்தன் படைப்புகளை படிக்க...
http://www.gnanakoothan.com/
ஞானக்கூத்தன் கவிதைகளில் சிறுதுளி இதோ....
ஜனவரி 10, 2014 ல் எழுதியது...
மாற்றுப் பேருந்து
மீன் சந்தையின் எல்லையைப் பேருந்து
நீங்கும் போது நேரெதிரில் வந்த ஆட்டோ
மோதிற்று. பயணிகள் வெளியில்
எட்டிப் பார்த்தார்கள். பேருந்தை விட்டு
நடத்துநர், ஓட்டுநர் இருவரும் இறங்கினார்கள்
கீழே இறங்குங்கள் பயணிகளே! உங்கள்
சீட்டில் குறித்துத் தருகிறேன், வேறு
பேருந்தில் செல்லுங்கள் என்றார் நடத்துநர்.
ஒவ்வொருவராகப் பயணிகள் கீழே இறங்கினர்.
பேருந்தில் ஒட்டப்பட்டிருந்த ‘எல்லார்க்கும்
நன்றாம் பணிதல்’
என்னும் திருக்குறளை
மேலும் ஒருமுறை பார்த்துவிட்டுப்
படியில் இறங்கினேன். நன்கு
பராமரிக்கப்பட்ட ஆடுகளால் ஈர்ப்புறும்
தேருடைய எங்கள் பெருமானே
இன்றும் எனக்குத் தாமதமாயிற்று
நின் கோவில் வந்தடைய.
வருமோ வராதோ மாற்றுப் பேருந்து.
Comments
Post a Comment