திகழொளி - குறள் கதை
திகழொளி - முடிவிலி அ மர்ந்திருந்த மக்கள் எழுந்து, ஏறைக்கோனுக்கு வாழ்த்து சொல்லி மெல்லக் கலையத் துவங்கினர். தலைமைக் காவலர் கடம்பர் தன் காவற்படையிடம், கயிற்றால் கட்டப்பட்ட இருவரையும் சிறைக்கு அழைத்துச் செல்லப் பணித்தார். மன்னரிடம் நின்று பேசிக் கொண்டிருந்த மாடன், நடப்பதெல்லாம் நனவா என நம்பாதவனாய்த் தன்னைத் தானே கிள்ளிக் கொண்டான். அதைக் கவனித்த ஏறைக்கோன், சிரித்துக் கொண்டே, "உண்மையா எனக் கிள்ளிப் பார்க்கிறாயா? இன்னும் நம்பவில்லை எனில் என்னைத் தொட்டுப் பார்" எனக் கையை நீட்டினார். "நம்புறேன் மன்னா, நம்புறேன்" என்ற மாடன், அழைத்துச் செல்லப்படும் இருவரையும் பார்த்தபடி, "மன்னா, இதெல்லாம் உங்ககிட்ட கேக்கலாமான்னு தெரியல?" என்று இழுத்தான். "நாட்டையே காத்துக் கொடுத்திருக்கிறாய், என்ன கேட்க வேண்டும், கேள் மாடன்" என்றார் ஏறைக்கோன். சொல்லத் துவங்கினான் மாடன். **** வ ழக்கம் போல் அன்றும் ஏறைக்கோனின் அரசவை மன்றம் கூடியது. காலையில் கோயிலின் வாயிலில் நிகழ்ந்தவை அமைச்சர்கள் உள்ளிட்ட அவையில் குழுமியிருந்த அனைவரின் பேசுபொருளாக இருந்தமையால், புரியாத ஒரு மெல்லிரைச்சலில்