புன்னகைத்திரை - குறள் கதை
புன்னகைத்திரை "சிரிப்பு, பிற உயிர்கள் கிட்டேந்து நம்மளை வேறுபடுத்திக் காட்டுறது இப்படில்லாம் நாம சொல்லிக்கிறோம். ஆனா, நாம எத்தனை பேரு உண்மையா..." என்று RJ தமிழினி பேசிக் கொண்டிருந்த போதே, அந்த வீட்டில் வானொலி பாதியிலேயே நிறுத்தப்பட்டிருந்தது. "ஏம்மா, நிறுத்திட்டீங்க, அக்கா பேசிட்டு இருந்துச்சுல்ல" என்றான் கண்ணன். "ஆமா, தெனமும் பேசுறது தானே? போடா, போயி படிக்கிற வேலையப் பாரு" என்று அம்மா வெடுக்கென்று கூற, மனதுக்குள் முனகிக் கொண்டே தன்னுடைய அறைக்குள் சென்று, தன்னுடைய திறன்பேசியில் 99.1 அலைவரிசையோடு ஒத்திசைக்க, தமிழினி தன் பேச்சை நிறுத்தி, 'நேற்று இல்லாத மாற்றம் என்னது' பாடலை ஒலிக்க விட்டிருந்தாள். தமிழினி இரவு 8:30க்கு company cabல் வந்திறங்கினாள். வாசல் அருகே நின்று கொண்டிருந்த அம்மா, "வா, தமிழு" என்று சிரித்தபடி வரவேற்றாள். தமிழும் அன்னையின் புன்னகையில் தன் களைப்பெல்லாம் நீங்கிப் போனவளாய், அம்மாவின் கன்னத்தைச் செல்லமாய்க் கிள்ளி, "செம்மயா பசிக்குதும்மா" என்று கொஞ்சினாள். கண்ணன் வரவேற்பறையில் அமர்ந்து நடப்பதெ