Posts

Showing posts from April, 2019

அக்கா - குறள் கதை

அக்கா...! - முடிவிலி இன்று ஒரு நாலு மாசமாவே என்னோட காலையும், மாலையும் அவளைச் சுத்தியே வந்துகிட்டு இருக்கு. அவ நடந்து போயி அந்த இன்போசிஸ் பஸ்ல ஏறுறது, திரும்பி பக்கத்துல இருக்க அவளோட ப்ரெண்டு கூட பேசுறது. ஏன், நின்ன இடத்துலேந்து தலையை மட்டும் நீட்டி, தன்னோட கம்பெனி பஸ் வந்துடுச்சான்னு எட்டிப் பாக்குறதுன்னு எல்லாமே எனக்கு slowmotionல  நடக்குறது போலவே இருக்கும். எத்தனை முறை பாத்தாலும், அவ கண்ணு, அதுக்கு அளவா வில்லு மாதிரி புருவம், அந்த புருவத்துல வந்து படியுற நாலே நாலு முடின்னு கவிதைங்க அவ. நாலு மாசமா பின்னாடியே சுத்திட்டு இருக்கேன். அவளுக்கு என்ன ஐஸ்கிரீம் பிடிக்கும்? எந்த நடிகர் பிடிக்கும்? என்ன கலர் பிடிக்கும்? இப்படி எல்லா டீடெயிலும் தேடிக் கண்டுபுடிச்சாச்சு. ரெண்டு மாசம் முன்னாடி, அப்பப்ப முறைச்சுப் பாக்குற பார்வை கூட இப்ப குறைஞ்சுருக்கு.  என்னடா இவன், இந்தப் பொண்ணு பின்னாடி சுத்துறதையே fulltime வேலையா வச்சிருப்பான் போலயேன்னு நீங்க நினைக்குற mindvoice எனக்கே கேட்குது. நான் விவேக், ஒரு தனியார் கம்பெனில நல்ல வேலையில இருக்கேன். ஒரே மாதிரி ஓடிக்கிட்டு இருந்த இயந்திரத்தனமான வ

எதுக்கு? - குறள் கதை

எதுக்கு? என்றைக்கும் வகுப்பு முடிந்து உற்சாகமாக வரும் ஜீவா, இன்று ஏதோ சிந்தித்துக் கொண்டு வருவதைப் பார்த்தாள் யாழினி. தான் பணிபுரியும் அதே பள்ளியில் ஜீவாவும் படித்து வருகிறான். ஜீவாவின் பள்ளி நேரம் முடிந்து மேலும் ஒரு மணிநேரம் யாழினிக்கு வேலை இருக்கும். ஜீவாவும் வகுப்பிலிருந்து வந்து ஆசிரியர் அறையில் அமர்ந்து அன்றைய வீட்டுப்பாடங்களை எழுதுவது வழக்கம்.  "என்னடா ஏதோ வலுவா யோசிச்சுகிட்டே வர்ற?" என்றாள் யாழினி, "ஒன்னுமில்லம்மா" என்று ஒப்புக்குச் சொன்னவன், அமைதியாக ஒரு இடத்தில் அமர்ந்து கொண்டான். பெற்றோர்க்கு மின்னஞ்சல், குறுஞ்செய்தி வழியாக வீட்டுப்பாடங்கள் பற்றிய குறிப்பினைக் கணினி மூலம் எழுதி அனுப்புவதில் யாழினி முனைந்திருந்தாள். தன் வேலை முடிவதற்கும், பணி நேரம் முடிவதற்கும் சரியாக இருந்தது. யாழினியின் கணினிக்கு மேலே இருந்த கடிகாரத்தின் மணி முள் ஐந்தின் அருகே நிற்க, நிமிட முள் பன்னிரெண்டை நோக்கி ஓடிக்கொண்டிருந்தது.  அருகே யாழினி வந்து நின்றது கூடத் தெரியாமல் அமைதியாக அமர்ந்திருந்த ஜீவாவைக் கன்னத்தில் செல்லமாகத் தட்டி, "பெரிய மனுசா, வாடா போலாம்&quo

அப்பா, ஒரு கதை சொல்றியா? - குறள் கதை

Image
அப்பா, ஒரு கதை சொல்றியா? "அப்பா..." எனது மகனின் அறையின் விளக்கை அணைக்கப் போகுமுன், அவன் குரல் கேட்டுத் திரும்பினேன். "டேய் ஜீவா, தூங்கலயா நீயி" "அப்பா, ஒரு கதை சொல்றியாப்பா?" ஜீவா கேட்க, அறைக்கு வெளியே நின்று கொண்டிருந்த யாழினி சிரித்துக் கொண்டே உள்ளே வந்து ஜீவாவின் அருகே அமர்ந்தாள். அவனை அப்படியே தூக்கித் தன் மடியில் அமர வைத்துக் கொண்டு, "அப்பாவுக்குக் கதையெல்லாம் சொல்ல வராதுடா" என்று சொல்லியபடி, என்னைப் பார்த்து, "என்ன சுந்தர், சர்தானே?" என்றாள் கேலியாக.  "ஆமாடா, நீ அம்மாக்கிட்டயே கதை கேட்டுக்கோ" என்றேன்.  "அப்பா, ப்ளீஸ்பா, ஒரே ஒரு கதை" என்ற ஜீவா, யாழினியின் வாயில் கைவைத்து மூடியபடி, "இனி அம்மா ஒன்னும் சொல்லாம நான் பாத்துக்கிறேன்" என்று சொன்னான். இருவரும் சிரிக்க, உடன் யாழினியும் சிரித்தாள். யாழினியின் அருகே நான் அமர, அன்னையின் மடியில் தலை வைத்துப் படுத்திருந்த ஜீவாவின் கால்களை எடுத்து என் மடியில் வைத்துக் கொண்டு கதையைச் சொல்லத் துவங்கினேன்.  "கதை சொல்றேன். ஆனா, இப்படியெல

எப்போது? - குறள் கதை

Image
எப்போது? "தம்பி, எத்தனை பேரு?" இந்த கேள்வியும், இந்த கேள்விக்கு அடுத்துவரும் வரிசையா வரும் கேள்விகளும் கேட்டுக் கேட்டு எனக்கே அலுத்து விட்டிருந்தது. "ரெண்டு பேரு தான்மா, நான், என்னோட wife"   "பசங்க இல்லையா?" நல்ல வேளை இந்தக் கேள்விய என் மனைவி கேக்கல. "இல்லம்மா, மேரேஜ் முடிஞ்சு ஒன்னரை ஆண்டு தான் ஆகுது" "முதல்ல அம்மான்னு கூப்பிடாதீங்க, சரி, லவ் மேரேஜா? அரேஞ்சுடா?" இதுவரை இந்தக் கேள்வியை வேறெங்கும் கேட்டதில்ல. 'இது புதுசாருக்கே!' என்று நினைத்துக் கொண்டு, "லவ் மேரேஜ் தான், ஏங்க இதுக்கும், வாடகை வீட்டுக்கும் என்னங்க தொடர்பு இருக்கு?" என்றேன். "இருக்குங்க, அரேஞ்சுடு மேரேஜ்னா, ரெண்டு வீட்டுலேந்தும் எப்பவும் உறவுக்காரவுக வந்துக்கிட்டே இருப்பாங்க, லவ் மேரேஜ்னா அது இருக்காது" 'நான் லவ் மேரேஜ் செஞ்சதுக்கு இப்படி ஒரு பலன் இருக்கா?' என்று நினைத்துக் கொண்ட நான், "அதெப்படிங்க, ரெண்டு வீட்டிலும் லவ்வுக்கு ஒத்துக்கிட்டாங்கன்னா, அடிக்கடி உறவினர்கள் வந்து போவாங்க இல்லயா?" என்றேன். என்னைப் பா