பயணம் - குறள் கதை
பயணம் என்ன தான் கை நிறைய காசு, வங்கியில் பணம், கடன் அட்டை இப்படின்னு ஆயிரம் வசதிகள் வந்தாலும், மனசு 'அடுத்து என்ன? அடுத்து என்ன?'ன்னு கேட்டுக்கிட்டே தான் இருக்கு. அந்த மாதிரி ஒரு நேரத்துல இந்த தேடல் உணர்வு என்னுடைய இயல்பான 9 - 5 சுழற்சி வாழ்க்கையிலேந்து ஒரு சின்ன ஓய்வு எடுத்துட்டு, எங்கேயாவது போன்னு சொல்லிக்கிட்டு இருந்துச்சு. நான் என் வீட்டோட வாசலின் படியில் உட்காந்திருந்தேன். என்னைத் தினமும் அலுவலகத்துக்குக் கூட்டிட்டுப் போகும் என் நண்பன், அவனோட பெரிய கண்ணை இமைக்காம என்னையே பாத்துட்டு இருந்தான். நான் அவனை செம்மையா ஓட்டுவேன். சில நேரம் வாழ்க்கையில ஏற்படுற வெறுப்பு, யார் யார் மேல வர்ற கோவம் எல்லாத்துக்கும் என்கிட்ட அடி வாங்குவான். ஆனா, ஒருமுறை கூட என்னைக் கைவிட்டதில்லை. எதிர்த்துப் பேசினது கூட இல்லன்னா பாத்துக்கோங்க. ஆனா, இந்த முறை பார்வையாலேயே 'என்னடா செஞ்சுகிட்டு இருக்க? கிளம்புடா...'ன்னு சொல்லிக்கிட்டு இருந்தான். ஓ... உங்ககிட்ட நான் யாருன்னே அறிமுகப்படுத்திக்கல பாருங்க... நான் செல்வக்குமரன். சென்னையில ஒரு CGI நிறுவனத்துல Matte Artist மற்றும் Lead Pr...