என்றாவது ஒரு நாள் - Someday in Future
"என்றாவது ஒரு நாள், நீ நல்ல நிலமைக்கு வருவடா... கவலைப்படாதே" சுந்தரோட அப்பா சொல்லிக்கிட்டு இருந்தார். சுந்தருக்கு அப்பாவின் இந்த ஆறுதல் சொல் கூட சிறு கோபத்தையும், கோபம் கொள்வதற்காக குற்றவுணர்வையும் ஒருசேரத் தந்தது. அமைதியாகவே இருந்தான். பொறியியல் கல்லூரிப் படிப்பு 2002ல் முடித்து இரு ஆண்டுகள் முடிந்திருந்தும், இன்னும் வெளியில் சொல்லிக் கொள்ளும் அளவுக்கு ஊதியம் பெறும் பணி கிடைக்கவில்லை. வெளிநாடு செல்வதற்கும் முயற்சி செய்து கொண்டிருந்தான். அந்த முயற்சியில், மும்பையில் நடந்த நேர்முகத் தேர்வில், அவனுடன் வந்த மூன்று நண்பர்களுக்கு துபாயில் வேலை கிடைக்க, சுந்தருக்கு வழக்கம் போல் கிடைக்கவில்லை... அதற்குத் தான் அப்பா அவனை ஆறுதல் செய்து கொண்டிருந்தார். மௌனமாக அன்று இருந்துவிட்டு, அடுத்த நாள் மேட்டூருக்குக் கிளம்பினான். தொலைபேசியில் கூட, சில நாட்கள் அப்பாவிடம் பேசுவதைத் தவிர்த்திருந்தான். செய்தித்தாள்களிலும், முகமைகள் மூலமும் விளம்பரங்கள் பார்த்து வேலைக்கு விண்ணப்பிதையே முழுத்தொழிலாகக் கொண்டிருந்தான். அனல்மின்நிலையத்தில் வேலை செய்தாலும், இரு ஆண்டுகளில் நுட்பங்கள் பல கற்றிருந்த