என்னம்மா சொல்ற? - குறள் கதை
என்னம்மா சொல்ற? -முடிவிலி சென்னையின் வெயில் சாளரத்தின் வழி உள்நுழைந்த காற்றையும் சூடாக்கி அனுப்பிக் கொண்டிருந்தது. இணையவழிக் காணொளி வகுப்பறை முடிந்ததும், தனது அறையில் இருந்து வெளியே வந்து, வரவேற்பறையில் இருந்த சாய்வணையில் அமர்ந்தான் ஜீவா. அருகே இருந்த சிறிய plastic chairஐ இழுத்து, தனது இடது காலை எடுத்து அதன் மேல் இட்டவனாய், remoteடினை எடுத்துத் தொலைக்காட்சியைத் துவக்கினான். இப்போது வளர்ந்துவிட்ட ஜீவாவினால் உட்கார முடியாத அளவுக்கு மிகச்சிறிய நாற்காலி அது. அவன் குழந்தையாக இருந்த போது, வாங்கியது. தொலைக்காட்சியின் ஒலி கேட்ட யாழினி, சமையலறையிலிருந்து, "ஜீவா, class முடிஞ்சுதாடா?" என்றாள். "முடிஞ்சுடுச்சும்மா, இன்னிக்கு என்னம்மா சமையல்?" என்றான் plastic chairல் இருந்த காலின் மேல் இன்னொரு காலையும் எடுத்துப் போட்டபடி. "சிக்கன் குழம்புடா" என்றாள் யாழினி. "சிக்கனா, வாசனையே வரலையே" என்ற ஜீவாவின் குறும்புச்சொற்கள் காதில் விழுந்தும், மனதுக்குள் சிரித்தபடி பதிலளிக்காமல் அமைதியாய் இருந்தாள் யாழினி. 'சுந்தரும் இப்படித் தான் சொல்லுவான்...