இன்று போகி

இன்று போகி

முதலில், அனைவருக்கும் போகி (pogi) வாழ்த்துக்கள்... அது bogi அல்ல... pogi தான் சரியான உச்சரிப்பு... தமிழில் சொல்லின் முதலில் பகரம் வந்தால் pa ஒலி தான் வரும்... பட்டம், பதவி, பகுத்தல், பண்பு...

இடையிலும் கடையிலும் ba என ஒலிக்கும்... பண்பு - panbu... 

துன்பம் போக, 
துயரம் போக
தூசு போக - மனத்து 
மாசு போக

அறுவடை முடிந்து - 
புதுநெல் எடுத்து - 
விதைநெல் தன்னை
இயற்கைக்குப் படைக்க -
பொங்கல் நாள் நாளையென
வீட்டைச் சுத்தஞ் செய்து
புதுவண்ணம் அடித்து -
பூக்கோலம் தெருக் காண -
மாக்கோலம் வாசல் காண -
பூங்கொத்து கொண்டே
அலங்கரிக்கும் நாள்...

போகி...

அலங்கரிக்கும் நேரம் இரவின் பனிக்குளிர்க்கிதமாய் - 
தீமூட்டிக் காய - அதுவே
இன்று காற்றினை மாசிடும்
அளவுக்கு மாறியதேன்...?

உள்ளத்தே உறங்கும் 
கள்ள எண்ணந்தன்னை - 
மேலோர் கீழோரெனக் காணும்
சாதி தன்னை -
பிரித்தே ஆளத்துடிக்கும் 
சூழ்ச்சி தன்னைக் 
கொளுத்த முடியாமல்
கூட்டிய குப்பையை -
கிழிந்த ஆடையை 
கொளுத்தியே ஆடுவோமா?
மாசு நீக்கி சுத்தஞ்செய்தல் இந்நாளென்றால்
தீமூட்டிப் புகையாக்கல்
மாசன்றோ...?

மனத்து மாசு நீக்கிடப் போகி
இதை உணர்ந்தே சொல்வோம் ஓங்கி...!


மாசுப் புகையெழத் தீயிடல்நன் றோமனத்து
மாசுநீங்கத் தீயிடற்போ கி.

#குறள்வெண்பா #மாசு #போகி #pogi

- முடிவிலி

Comments

Popular posts from this blog

அகர முதல - சிறுகதை (திருக்குறள் கதை) குறள் 0001

புறநானூறு பேசும் நீர் மேலாண்மை

தமிழாய்வர் சீனி வேங்கடசாமி - Mayilai Seeni Venkatasami - A Tamil Researcher