யாருங்க இவங்கெல்லாம் - குறள் கதை
யாருங்க இவங்கெல்லாம்? - முடிவிலி "யாருங்க இவங்கெல்லாம்?" "இன்னிக்கு இந்த நிலைமை வரும்னு நான் நெனச்சே பாக்கல." "வேலை செய்யாததுக்கு வேலைலேந்து தூக்கிருந்தாலும், மனசு கொஞ்சம் அமைதியாயிருந்திருக்கும். ஆனா, நான் என்ன செய்யணுமோ அதைச் செஞ்சதுக்கு இந்த நிலைமை." "அவனை நெனச்சாலே *#@#@#@#@@#*" **** நான்கு நாட்களுக்கு முன், '247 செய்தித் தொலைக்காட்சியின் நேரலை நேர்க்காணலில் இன்று' என்று எனது நிகழ்ச்சிக்கு இரு நாட்களாக எங்கள் தொலைக்காட்சியில் விளம்பரம் ஓடிக்கொண்டிருந்தது. வாரத்திற்கு இரு VIPகளை நேர்காணல் செய்வதால், எனக்கு இருந்திருக்க வேண்டிய அச்சம் ஏனோ சிறிதும் இருந்திருக்கவில்லை. என்றும் போல அன்றும் நேர்காணலில் கேட்கவேண்டிய கேள்விகளுக்காக, கூகுளின் உதவியை நாடிக் கொண்டிருந்தேன். செய்து கொண்டிருந்த வேலையில் மூழ்கியிருந்த எனக்கு, எங்கள் அலுவலகம் வரப்போகிறவரின் பாதுகாப்புக் காவலர்களால் சோதனை எனக் களேபரம் ஆகிக் கொண்டிருப்பதைக் கவனிக்கவில்லை. "செந்தில்" என்ற ஒலி கேட்டு, எழுதி...