தீவு - தமிழாக்கச் சிறுகதை
தீவு ஜனனி @Janani_momof2 (தமிழில் - முடிவிலி) பல காலங்களாய், நான் என் தீவின் கரைதனில் உலாவிக் கொண்டிருந்தேன்... தனிமையில் இருப்பினும் மகிழ்வுடன் என் சொர்க்கத்தில்... தொலைக்கடற்பரப்பில் அவ்வப்போது கப்பல்களைப் பார்க்கிறேன்... ஆனால், அவற்றை நான் கண்டுகொண்டதில்லை... ஏனெனில், அவை இத்தீவை நெருங்காது என்பதை நான் அறிந்திருந்தேன். அந்த அளவுக்கு இத்தீவை அச்சமூட்டுவதாக மாற்றி வைத்திருந்தேன்... ஒரு அழகிய நாள் விடியல் நேரம், கதிரின் முதலொளியை நான் விழியால் பருகிக் கொண்டிருந்த வேளையில், வியக்கும் ஏதோ ஒன்று என்னுலகை நெருங்கி வந்தது... பெரும் நாவாயல்ல... சிறுபடகொன்று... இருந்தும் என் விழியை அதை விட்டு எடுத்திடாவண்ணம் கவர்ந்திடும் விதமாய் இருந்தது... துடுப்பினை இட்டபடி படகில் இருந்த உன்னைக் கண்ட அந்த நொடி என் மனம் என் நிலையில்லை... நீ களைப்பாக இருந்தாய்... கவர்ச்சியாகவும்... நான் உன்னைப் பேச விடவே இல்லை... நீ இன்னும் உன்னை வருத்திக்கொள்ள விரும்பவில்லை... உன்னை ஏந்திக்கொண்டேன்... உனக்காகக் கவலை கொண்டேன்... உன்னை நன்கு கவனித்தேன்... காதலித்தேன்... என்வச...