மகிழ்ச்சி - குறள் கதை
மகிழ்ச்சி கார்காலத்தின் காலைப்பொழுதில் தூறலினால் தன் வீட்டுத்தோட்டத்தின் மரங்களின் பசுமை நிறம் இன்னும் மெருகேறியிருந்ததைத் தன் வீட்டு மாடியிலிருந்த கண்ணாடியிட்ட சாளரத்தில் இருந்து பார்த்துக் கொண்டிருந்தார், கதிரேசன். மழையின் இன்பக்குளியலில் நனைந்திருந்த மரங்களும், அந்த மரங்களில் இன்னிசை படித்துக் கொண்டிருந்த மைனாக்களும் அவர் மனதில் மகிழ்ச்சியை இரட்டிப்பாக்கி விட்டிருந்தன. நேற்றை விட இன்று இரு ரோஜா மலர் மொட்டுகள் மழையில் நனைந்து முகிழ்ந்திருந்தன. தன்னை மறந்து நின்று கொண்டிருந்த கதிரேசனை நோக்கி கையில் பேசியை எடுத்துக் கொண்டு வந்தாள் வள்ளி. "என்னங்க... குமரன் சார் லைன்ல இருக்காரு..." பேசியை வாங்கிய கதிரேசன், "குமரன், நல்லா இருக்கீங்களா? வீட்ல எல்லாம் நலமா? ஆபீஸ் எல்லாம் எப்படி போகுது?" என்று கேள்விகளை அடுக்கினார். கதிரேசன், நான்கு மாதங்களுக்கு முன் தான் அரசுப்பணியில் இருந்து ஓய்வு பெற்று, தான் பிறந்த ஊரில் கட்டிய மாடி வீட்டிலும், பின்னே அமைத்துள்ள எழில் கொல்லையிலும் தன் ஓய்வு வாழ்வை மகிழ்வோடு கழித்து வருகிறார். மறுமுனையில், குமரன் "எல்லார...