அன்றும் இன்றும் பெண்கள் - Women Then and Now
வசூல்ராஜா படத்தில், "அந்தப் பொண்ணு என்னை டாக்டர்னு நெனச்சிக்கிட்டு இருக்கு, அத்தப் போயி கெடுக்க சொல்றியா?" எனக் கமல் கேட்க, பிரபு சொல்வார் "அதான் கல்யாணம் ஆயிடுதில்ல, அப்புறம் எப்படி கெடுக்கிறதாகும்?" என்பார். இதை நகைச்சுவை என எண்ணி நானும் ஒரு காலத்தில் சிரித்திருக்கிறேன். ஆனால், பெண்ணின் உணர்வுகள், வலிகள் என்றும் உணரப்படாமல் நகைச்சுவையாகவே கடந்து செல்லப்படுகிறது. ஒவ்வொரு காலத்திலும், பெண்ணை ஆண் என்பவன் தன் அடிமையாக - தன் உடைமையாகவே பார்த்து வந்துள்ளான். குழந்தைத் திருமணம், கட்டாயத் திருமணம் எனப் பலவிதமாக பெண்கள் தங்கள் உரிமையைச் சொல்லக் கூடத் தெரியாதவளாகவும், மீறிச் சொல்லினால் அவளின் ஒழுக்கம், நெறி ஆகியவற்றை மாற்றிப் பேசப்படுவதை தாங்க முடியாதவளாகவும் இருக்க வைக்கப்பட்டிருக்கிறாள்... இந்த நிலை, கல்வியினால், பட்டறிவினால், வெளியுலகத் தொடர்பினால், படிப்பினால் சிறிது மாறினாலும் கூட, அதை ஏற்க முடியாமல் இந்த ஆணாதிக்கச் சமூகம் அவளை அடக்கி வைக்கவே பார்க்கிறது. சுமார் 128 ஆண்டுகள் முன்பு, நிகழ்ந்ததற்கும், இன்று நிகழ்வதற்கும் எந்த வேறுபாடும் இல்லை என்றால், நாம் வளர்ச்சி அட...