Posts

Showing posts from July, 2016

ஞானக்கூத்தனுக்கு அஞ்சலி

Image
ஞானக்கூத்தனுக்கு அஞ்சலி ஞானக்கூத்தன் (அக்டோபர் 7 1938 - ஜூலை 28, 2016) ஒரு படைப்பாளனின் இறப்பில் இந்த சமுதாயம் அவனிடமிருந்து வரவேண்டிய பல படைப்புகளை இழக்கிறது... இறந்தவர்க்கு நாம் செய்யவேண்டியது அவர் தந்த படைப்புகளையும் இழக்காமல் இருப்பதே... படிப்போம்... ஒருமுறையேனும்...! - கணபதிராமன் ஞானக்கூத்தன் படைப்புகளை படிக்க... http://www.gnanakoothan.com/ ஞானக்கூத்தன் கவிதைகளில் சிறுதுளி இதோ.... ஜனவரி 10, 2014 ல் எழுதியது... மாற்றுப் பேருந்து மீன் சந்தையின் எல்லையைப் பேருந்து நீங்கும் போது நேரெதிரில் வந்த ஆட்டோ மோதிற்று. பயணிகள் வெளியில் எட்டிப் பார்த்தார்கள். பேருந்தை விட்டு நடத்துநர் , ஓட்டுநர் இருவரும் இறங்கினார்கள் கீழே இறங்குங்கள் பயணிகளே! உங்கள் சீட்டில் குறித்துத் தருகிறேன் , வேறு பேருந்தில் செல்லுங்கள் என்றார் நடத்துநர். ஒவ்வொருவராகப் பயணிகள் கீழே இறங்கினர். பேருந்தில் ஒட்டப்பட்டிருந்த ‘ எல்லார்க்கும் நன்றாம் பணிதல் ’ என்னும் திருக்குறளை மேலும் ஒருமுறை பார்த்துவிட்டுப் படியில் இறங்கினேன். நன்கு பராமரிக்கப்பட்ட ஆடுகளால் ஈர்

வழிப்போக்கன் நான்

Image
வழிப்போக்கன் நான்  புகைப்படம்: சதீஸ் துவக்கம் முடிவு தெரியும்... எனினும் போகும் பாதை புரியா வினோதமான பயணம்... பயணம் துவங்கிய நாள் சிலர் கைப்பிடித்து நடந்தேன்... இப்போது என் கைப்பிடித்து சிலர் வருகின்றனர்... சில நேரம் புல்வெளியில்... சில நேரம் முள்வெளியில்... வந்த பாதை - நியாபகங்கள் தந்த சுகங்கள்... ரணங்கள் தந்த வடுக்கள்... புதிய தடங்கள் வியப்பைத் தரும்... வழியில் தடங்கல் அனுபவம் தரும்... புதிய தடங்களையும் புதிய தடங்கலையும் எதிர்நோக்கி பயணம் தொடர்கிறது... வழிப்போக்கன் நான்.... (செப்டம்பர் 6 2013 அன்று எழுதியது)

பாரதியும் நானும்

Image
பாரதியும் நானும் எனது பள்ளிப்படிப்பின் போது, நான் முதன் முதலில் பங்கு பெற்ற ஆங்கில கட்டுரை போட்டியில் இரண்டாம் பரிசு பெற்றேன். நல்ல வேளை. இரண்டாம் பரிசு... அந்த பரிசு என் பார்வையை நேராக்கியது... என்னை சிறிதேனும் மாற்றியது... என்னுள் நேர்மறை பாதிப்பு தந்த அந்த பரிசு பாரதியார் கவிதைகள் - கையடக்க பதிப்பு ... நான் மகிழ்ந்தது மட்டுமல்லாமல் முதல் பரிசு என்ன கிடைத்தது என வினவ கூட மறந்தேன்... இங்கு நான் தமிழ் கொண்டு எழுத பாரதியும் ஓர் நற்காரணம்... அந்த பாரதியின் கவிகளில் எனக்கு பிடித்த கவி இதோ... அறிவே தெய்வம் - மகாகவி பாரதி ஆயிரந் தெய்வங்கள் உண்டென்று தேடி அலையும் அறிவிலிகாள்! -பல் லாயிரம் வேதம் அறிவொன்றே தெய்வமுண் டாமெனல் கேளீரோ? மாடனைக் காடனை வேடனைப் போற்றி மயங்கும் மதியிலிகாள்!-எத னூடும்நின் றோங்கும் அறிவொன்றே தெய்வமென் றோதி யறியீரோ? சுத்த அறிவே சிவமென்று கூறுஞ் சுருதிகள் கேளீரோ?-பல பித்த மதங்களி லேதடு மாறிப் பெருமை யழிவீரோ? வேடம்பல் போடியொர் உண்மைக் குளவென்று வேதம் புகன்றிடுமே-ஆங்கோர் வேடத்தை நீருண்மை யென்றுகொள் வீரென்றவ் வேத மறியாதே. நாமம்பல் கோடியொர் உண்மைக் குளவென்று நான்மற

எல்லோருக்கும் வணக்கம்....

Image
எல்லோருக்கும் வணக்கம்.... இதோ நானும் தொடங்கி விட்டேன்... எழுத... நான் ஏற்கனவே எழுதிய சிலவும், நான் படித்ததில் பலவும் பகிர - தொடங்கி விட்டேன் எழுத... பிடித்தால் - சொல்வதில் பிழை வந்து இடித்தால் - நான் சொல்வதே பிழை என துடித்தால் - கட்டாயம் பின்னூட்டம் இடவும்.... என்னுடை கருத்துகள் ஏற்புடை எனின் பூங்கொத்து அனுப்புக... மாற்று கருத்து எனும் சவுக்கு அடியும் அனுப்புக... இரண்டையும் என்றும் ஏற்றுக்கொள்ளும் கணபதிராமன்