JM21 - குறள் கதை
JM21 - முடிவிலி (Vince Gilligan உருவாக்கிய Breaking Bad தொடரின் களத்தை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டது) நில்லாத வற்றை நிலையின என்றுணரும் புல்லறி வாண்மை கடை. (குறள் 331, அதிகாரம்: நிலையாமை, இயல்: துறவறவியல்) தனது வீட்டின் பின்புறம் இருந்த நீச்சல்குளத்தின் அருகே நின்றிருந்தார் வால்டர். டமார் என்று பெருவெடியொலி கேட்க, அனிச்சையாய்க் குனிந்து பின் மேலே பார்க்க, உயரே வானில் தீயும், புகையும் உண்டாகி, கீழே விழுந்து கொண்டிருந்தது. அந்தப் புகையில் இருந்து பல பொருட்கள் இங்கும் அங்கும் சிதறி விழ, அதன் நடுவே ஒரு கரடி பொம்மை வால்டரின் நீச்சல்குளத்தில் வந்து விழுந்ததில் வால்டரின் உயரத்திற்கு மேலாகத் தண்ணீர் வெடித்தெழுந்து சிதறியது. என்ன நிகழ்கிறது என்பதை உணராத வால்டர் நீச்சல்குளத்தில் எட்டிப் பார்க்க, விழுந்த கரடிபொம்மை தண்ணீருக்குள் திரும்பி மேலெழ, அதன் முகத்தில் ஒரு கண்ணே இருந்தது. இன்னொரு கண் இருந்த இடம் கருகிப் போயிருந்தது. *** தலைப்பாகையும், கால் வரை நீண்டிருந்த அங்கியும் அணிந்தவரின் தலை முடி பக்கவாட்டில் தோள் வரையும், பின்னால் முதுகின் பாதி வரையிலும் நீண்டிருந்தது. இடது கையில் Mont Blanc