இதுக்காடா...? - குறள் கதை
இதுக்காடா...? - முடிவிலி “எழுந்திருடா, சரவணா , மணி எத்தனை ஆகுது பாரு” என்ற அம்மாவின் சொற்களைக் காதில் வாங்கியும் வாங்காதது போல தூங்கிக் கொண்டிருந்தான் சரவணன். சென்னையில் pix fx எனும் நிறுவனத்தில் வேலை பார்த்து வரும் சரவணன், விடுமுறைக்கு ஊருக்கு வந்தால் இப்படித்தான் தூங்குவான்னு அம்மாவுக்கும் தெரிந்து தான் இருந்தது. பத்து நிமிடங்கள் கழித்து, “எழுந்திருடா சரவணா” என்ற அம்மா, அவனது கட்டிலின் அருகில் காபிக் கோப்பையையும் வைத்தார். போர்வையை மட்டும் மெல்ல விலக்கி, காபிக் கோப்பையை எடுக்கப் போன சரவணனின் கையைப் பிடித்து , “எழுந்து போயிப் பல்ல விளக்குடா” என்று அம்மா சொல்ல, “லீவு தானம்மா” என்று சிணுங்கிக் கொண்டே எழுந்தான் சரவணன். சற்று நேரத்தில் சுடச்சுட அம்மாவின் கையால் மொறு மொறு தோசையும் , புதினாத் துவையலும் சேர்ந்து அவனது பசியைக் கூட்ட, எத்தனை தோசை என்ற கணக்கில்லாமல் உள்ளே சென்று கொண்டிருந்தது. “அம்மா , ஊருல வேற என்ன நடக்குது ? ” “இந்த ஊருல என்னடா நடந்துடப் போகுது. இது என்ன சென்னையா ? சொல்றதுக்கு ஒன்னு இருக்கு. ஆனா , அவன் பேரைக் கேட்டாலே உனக்குப் புடிக்காதுன்னு தான் எதுவும் ச