அழியாக்குருதி - குறள் கதை
அழியாக்குருதி - முடிவிலி கொலைவினைய ராகிய மாக்கள் புலைவினையர் புன்மை தெரிவார் அகத்து. - குறள் எண்: 329 “அ ம்மா,byeம்மா" “டேய் சரண், எங்கடா போற? இருட்டப் போகுதுடா” “அம்மா, கொஞ்ச நேரம் தான், சைக்கிள் ஓட்டப் போறேன், just half an hour” என்று சொல்லியபடி தனது fiber helmetஐ எடுத்து மாட்டிக் கொண்டே தனது RODEO மிதிவண்டியில் ஏறிப் பறந்தான் அவன். “கேட்டுக்குள்ள ஓட்டுடா, வெளியப் போகாதே” என்ற அம்மாவின் குரல் அவன் காதுகளில் எட்டியிருக்கவில்லை. **** மா லை வெயில் தனது சூட்டின் வீச்சினை மெல்ல மெல்ல குறைக்கத் தொடங்கியிருந்தது. மணி நான்கு என்பதை காவல் நிலையத்துக்குள் நுழைந்த டீக்கடைப் பையனைப் பார்த்துத் தெரிந்து கொண்ட தலைமைக் காவலர், “ட்டான்னு கரெக்ட்டா வந்துடுறான்யா" என்று சொல்லியபடி, தேநீரை எடுத்துக் கொண்டார். அவரைக் கடந்து அந்தப் பையன், பத்தொம்பது வயசு ஆகுது, இருந்தாலும் பையன்னே சொல்வோம், ஆய்வாளர் அறைக்குள் நுழைந்து 'செல்வம் காவல்துறை ஆய்வாளர்' என்று எழுதியிருந்த பெயர்ப்பலகையின் அருகே தேநீர்க் குவளையை வைத்தான். தலையைப் பின்னால் சரிந்தவாறே, கண்களை மூடி அமர்ந்...