Posts

Showing posts from 2021

The Taste of The Water

Image
  The Taste of the Water - Infinity Once upon a time, there were two brothers in a village, near the seashore. The elder one, Sato, always used to scold and treat him like his slave. He wished that his younger one should be obedient to him and do whatever he says without a word. The younger brother, Trio, always listened to his brother. Sometimes, he thought that he was being treated by Sato badly. But, the next moment, he told himself that he can bear anything for his brother, even the mistreatment from him. Time flew and both brothers aged to their youth. Sato got married. Trio thought that his mother, who died in his infancy, came as his brother’s wife. But it turned to be the beginning of the living hell of his life. Now, he had to do the chores and orders from his brother and brother’s wife. One day, Sato’s wife cried, “Oh god, where did I keep that? I could not see my necklace anywhere. God, I can’t live in this hell”. Without any investigation, everyone’s glare fell upon

அரண் - குறள் கதை

Image
    அரண்   - முடிவிலி (ஏறைநாடு கதை 4) தன் மீது மணித்துளிக்கொரு முறை ஓயாது வந்து மோதிக் கொண்டிருக்கும் மேற்கடலின் அலைகள் தன் கால்விரல் தொட்டு விளையாடுவதாக நினைத்து நிமிர்ந்து நின்று கொண்டிருந்தது ஏறை நாட்டின் மேற்குப் புற அரணாய் நின்று காக்கும் ஏறை மலை. பல நூறு அடிகள் உயரத்திற்கு வெறும் பாறைகளாய் மேற்கடலுக்கு முதுகு காட்டி நிற்கும் ஏறை மலை , அந்த உயரத்தில் இருந்து கிழக்கு நோக்கி சரியும் சரிவுகளில் மரங்களும் , சோலைக்காடுகளும் நிறைந்து வளம் பொருந்தியதாக விளங்கியது. ஏறை மலையில் வீழும் மழை மலையின் உச்சியில் ஏரியாகத் தாங்கி , அதிலிருந்து வழியும் இரு ஆறுகளான செவ்வாறு , வளவாறு என ஓடி , ஏறை நாட்டை மேலும் வளமாக்கின. ஏறை மலையில் சிறுகுன்றூர் துவங்கி ஏலனூர் வரை பரந்திருந்த ஏரியின் இருபுறத்திலிருந்து வழியும் செவ்வாறு , வளவாறு ஆகியன மீண்டும் இணையும் இடத்தில் இருந்தது ஏறைக்கோன் ஆட்சியில் மக்கள் மகிழ்வோடு வாழும் ஏறை நாட்டு தலையூரான செவ்வூர். செவ்வூரின் கிழக்கே மலைப்பகுதியிலிருந்து கிடைக்கும் தினை , மிளகு , ஏலம் , செவ்வூரின் மேற்கே செவ்வாற்றின் வளத்தால் விளையும் வாழை , நெல் , மஞ்சள் ஆகியன ஏறை நாட்டை வள

எனக்குத் தெரியுமே - குறள் கதை

Image
  எனக்குத் தெரியுமே - முடிவிலி அ ந்த வெள்ளை நிற battery operated வண்டி, K7 காவல் நிலையத்தின் முன் மெல்ல ஊர்ந்து வந்து நின்றது. வண்டியில் அமர்ந்தவாறே தலையை மட்டும் சாய்த்தபடி இருந்த செல்வத்தின் கண்கள் இரண்டும் சில நொடிகள் காவல் நிலையத்தை மேய்ந்தன.  காவல் நிலையத்தின் வாசலில் நின்றிருந்த காவலர் குமார், "யாருபபா அது?" எனக் கேட்க, செல்வம் வண்டியைச் சற்று முன்னெடுத்து ஓரம்கட்டி நிறுத்தினார். வண்டியில் இருந்து இறஙகிய செல்வம், தனது pant packetஐத் தடவிச் சரிபார்த்தபடி, காவலரை நோக்கி வந்தார். "யாருப்பா, என்ன வேணும்?" என்றார் குமார். "சார், நான் இந்த ஏரியா கார்பரேசன் ஸ்வீப்பர், இன்ஸ்பெக்டரைப் பாக்கணும்." "என்ன மேட்டரு, என்கிட்டயே சொல்லுப்பா, ஆமா, எப்பவும் ஒரு தள்ளுவண்டியில தான வருவீங்க? இப்ப battery வண்டியா? நல்லா இருக்குய்யா" "ஆமாங்க, இப்பதான் கொடுத்தாங்க. கொஞ்ச நாள் ஆச்சு, நைட்டு சார்ஜுல போட்டா போதும்" என்று வெள்ளந்தியாய்ச் சிரித்தார் செல்வம். "சரிப்பா, என்ன வேணும்னு சொல்லவே மாட்டுறியே?" எனச் சொல்லிக் கொண்டிருக்கும் போதே, காவல் நிலையத்