உன்னைப் போல - குறள் கதை
உன்னைப் போல -முடிவிலி இதுவரை மழை பெய்து சற்று ஓய்வெடுத்துக் கொண்டிருந்த நேரம், மேற்கில் கொஞ்சம் முகில்கள் விலக, மாலை நேரத்து இளவெயில் சாளரத்தின் வழி எட்டிப் பார்த்துக் கொண்டிருந்தது. எங்கிருந்தோ பறந்து வந்து சாளரத்தின் கம்பியைப் பற்றிய புறா ஒன்று 'க்குருகும்... க்குருகும்...' என்று நின்ற இடத்திலேயே சுற்றி வந்தது. "டேய், தம்பி மாறா, அந்தப் புறாவ வெரட்டுடா" என்று வரவேற்பறையிலிருந்து அம்மாவின் குரல் கேட்டது. "அம்மா, அது என்னம்மா செஞ்சது? அது பாட்டு பாடிக்கிட்டு இருக்கு. அதை ஏன்மா வெரட்டணும்?" "Window, Balcony எல்லாம் கழிஞ்சு வச்சுட்டுப் போயிடுது, நீயா துடைக்கப் போற? கேள்வி கேட்காம வெரட்டுடா" என்று அம்மா சொல்லிக் கொண்டே அறைக்குள் வர, புறா தானாகவே பறந்து போயிருந்தது. "உங்களைப் பாத்தததும் அதுவே போயிடுச்சும்மா" என்றேன் மெதுவான குரலில். "ஆமான்டா, நான் அரக்கி, என்னைப் பாத்து பயந்து ஓடிடுச்சு. உன் வயசுல எல்லாரும் கல்யாணம் செஞ்சுட்டு, செட்டில் ஆகிட்டான். நீ என்னடான்னா என்கூட உரண்டை இழுத்துட...