Posts

Showing posts from August, 2017

யாருங்க சொந்தம் - சிறுகதை short story 5

"என்னங்க... டீ..." குரல் கேட்டதில் செய்தித்தாளில் இருந்து முகம் தூக்கிப் பார்த்தார் சுந்தரின் அப்பா. நின்றபடி கையில் இருந்த செய்தித்தாளில் இருந்த செய்தியைப் படித்துக் கொண்டிருந்தாள் அம்மா.  'போன வருட 7/11 தாக்குதலினால் வேலைவாய்ப்புகள் சரிவு' உள்ளுக்குள்ளே, தனது மகன் சுந்தரைப் பற்றி சிறுகவலை எழ, மனைவியின் முகக்குறி கவலை கண்டு, தேநீர்க் கோப்பையைக் கையில் எடுத்தவாறு " சுந்தர் எங்கே?" என்றார் அப்பா. "அவனோட ஃபிரண்ட் வீட்டுக்கு... ம்... விஜய் வீட்டுக்குப் போயிருக்கான். ஏதோ இண்டர்வியூ இருக்காம். சென்னையில. அது பத்தி விசாரிக்கப் போயிருக்கான். வரும்போது அப்படியே ட்ரெயின் டிக்கெட் எடுத்துட்டு வர்றேன்னு சொன்னான். நான் கொஞ்சம் காசு கொடுத்தேன்." "ஆமா. கேட்டாக் கொடு. என்கிட்ட கேட்க கூச்சப்படுறான். நாட்டுல ஒருத்தனுக்கும் வேலை கிடைக்கல... இவன் என்ன செய்வான்...? இந்த வேலையாச்சும் கிடைச்சா நல்லா இருக்கும். ஒருநாள் அவன் நல்லா வருவான் பாரு..." " இத அவன்கிட்ட சொல்லலாம்ல... ரெண்டு பேருக்கு நடுவுல என்கிட்ட சொல்றீங்க...?" என கிச்...

பன்னாட்டு நட்பு நாள் - International Friendship Day

Image
அன்னையர் நாள், தந்தையர் நாள் போன்று இந்த நட்பையும் ஒரு நாளில் அடைத்து விட முடியாது. எனினும், சில அடையாளங்கள், சில கொண்டாட்டங்கள் நம் வாழ்வின் மாற்ற முடியாத அங்கமாக நிலைத்திடக் கூடியது. அவ்வாறான, ஓர் கொண்டாட்டமே ஒவ்வொரு ஆகஸ்ட் மாதம் முதல் ஞாயிறு அன்று (இன்று) கொண்டாடப்படும் பன்னாட்டு நட்பு நாள்.  ஜே சி ஹால் - ஹால்மார்க் நிறுவனர் முதலில், நட்புக்கு என்று ஒரு நாள் கொண்டாடத் துவங்கியது 1930 ஆகஸ்ட் மாதம் 2 ஆம் நாள். ஹால்மார்க் வாழ்த்து அட்டை நிறுவன உரிமையாளர் திரு ஹால் தனது நிறுவன வாழ்த்து அட்டை விற்பனை அதிகரிக்க ஆகஸ்ட் 2 ஆம் நாளை நட்பு நாளாக அறிவித்தார். முதலில், நட்புக்காக கொண்டாடப்பட்டாலும், பின்னர் அது வியாபாரத்திற்காக அவரால் கையாளப்பட்ட உத்தி (business Gimmick) என விமர்சனங்களுக்கும் உள்ளானது. 1935 ஆம் ஆண்டு அமெரிக்க நாடாளுமன்றத்தில் ஆகஸ்ட் மாதம் முதல் ஞாயிறு அன்று தேசிய நட்பு நாளாக அறிவிக்கப்பட்டது. இந்த நிகழ்வுக்குப் பின், அமெரிக்கா முழுவதும் கொண்டாடப்பட்டு வந்தாலும், 1958 ஆம் ஆண்டுக்குப் பின்னர் உலகநாடுகளும் கொண்டாடத் துவங்கின. 1997 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையின் தல...