தொடரும் பயணம் - குறள் கதை
தொடரும் பயணம் - முடிவிலி முகில்களை இழுத்துச் சூடிக் கொண்டிருந்த மலைகளின் உச்சியில் இருந்து, முகில்களே வழிந்து நிற்பது போல வெண்பனி போர்த்தி இருந்தது. உருகிய பனியின் துளிகள் ஒன்றிணைந்து, மலையில் வழிந்து, தானே உருவாக்கிய பாதையில் பாக் ஆறாக ஓடிக் கொண்டிருந்தது. அழகிய ஜூலை மாதக் காலைப் பொழுதில், பாக் ஆற்றின் அருகே இருந்த சோலைமரங்களில் இருந்து பறவைகளின் ஒலிகள் இசையாய்க் காற்றில் விரவிச் சென்றது. ஆற்றை ஒட்டி ஓடிய சாலையின் ஓரத்தில் இருந்த அந்தத் தாபாவில் நுழைந்தன அந்த இரண்டு RE Hunter 350. வண்டியில் இருந்து இறங்கிய கவினும், சத்யாவும் தங்களது தலைக்கவசத்தைக் கழற்றி, வண்டியிலேயே வைத்துவிட்டு, தங்களுடைய backpackஐ எடுத்துக் கொண்டனர். கல்லூரியில் இருந்தே நண்பர்களான கவினும், சத்யாவும் வளாக நேர்காணலில் தேர்வு பெற்று, ஒரே நிறுவனத்தில் பணி புரிகின்றனர். வேலைக்குச் சேர்ந்தபோதே ஒரு ஆண்டு நிறைவின் போது, சாலைப் பயணம் செல்வதென முடிவெடுத்திருந்தாலும், சில ஆண்டுகள் தள்ளிப் போய், ஐந்தாவது ஆண்டில் சாலைப்பயணம் நிகழ்ந்து கொண்டிருந்தது. டெல்லி வரை வானூர்தியில் வந்து டெல்லியில் இருந்து, வாடகைக்கு வண்டி எடுத்து, லே வ