நீர்க்குமிழி
நீர்க்குமிழி - முடிவிலி ஒ லக்கூர் ஏரியிலிருந்து சிறுதாமூர் நோக்கி அடித்துக் கொண்டிருந்த காற்று, வெயிலின் தாக்கத்தில் ஈரப்பதத்தை ஏற்றிக் கொண்டிருந்தது. விக்னேஷ் தன்னுடன் எட்டாம் வகுப்பில் படிக்கும் தோழி வளர்மதியைப் பார்க்க அவளுடைய வீட்டிற்குச் சென்று கொண்டிருந்தான். அவளுடைய வீட்டுக்குச் செல்லும் வழியிலேயே குளத்தங்கரையின் அருகே களிமண்ணில் நீரைச் சிறிது சேர்த்துக் கொண்டிருந்த வளரைப் பார்த்து, "ஏ வளரு, ஏன் இங்க களிமண்ணைப் பிசைஞ்சுட்டு இருக்கெ?" என்றான் விக்கி. கையில் ஒட்டியிருந்த களிமண்ணை உருண்டையாக்கி, அதில் மேலும் மண்ணை அப்பிவிட்டு, புறங்கையால் தன் முகத்தில் விழுந்த முடியை விலக்கியபடி நிமிர்ந்து தன் நண்பன் விக்கியைப் பார்த்தாள் வளர்மதி. வளர்மதியும், விக்கியும் ஒலக்கூரில் இருக்கும் அரசுப் பள்ளியில் ஒன்றாகப் படிப்பவர்கள். ஐந்து கிலோ மீட்டர் தள்ளி இருக்கும் பள்ளிக்கு முதலில் தனித்தனியே சென்றவர்கள் பேச்சுத்துணைக்குச் சேர்ந்து செல்லத் தொடங்கினர். இப்போது, இலவசப் பாசில் பேருந்தில் சென்றாலும், இருவரும் இணைந்தே செல்வார்கள். "வா விக்கி, நானும் புள்ளையார் சிலை செய்யப் போறேன். நா