எனக்குத் தெரியுமே - குறள் கதை
எனக்குத் தெரியுமே - முடிவிலி அ ந்த வெள்ளை நிற battery operated வண்டி, K7 காவல் நிலையத்தின் முன் மெல்ல ஊர்ந்து வந்து நின்றது. வண்டியில் அமர்ந்தவாறே தலையை மட்டும் சாய்த்தபடி இருந்த செல்வத்தின் கண்கள் இரண்டும் சில நொடிகள் காவல் நிலையத்தை மேய்ந்தன. காவல் நிலையத்தின் வாசலில் நின்றிருந்த காவலர் குமார், "யாருபபா அது?" எனக் கேட்க, செல்வம் வண்டியைச் சற்று முன்னெடுத்து ஓரம்கட்டி நிறுத்தினார். வண்டியில் இருந்து இறஙகிய செல்வம், தனது pant packetஐத் தடவிச் சரிபார்த்தபடி, காவலரை நோக்கி வந்தார். "யாருப்பா, என்ன வேணும்?" என்றார் குமார். "சார், நான் இந்த ஏரியா கார்பரேசன் ஸ்வீப்பர், இன்ஸ்பெக்டரைப் பாக்கணும்." "என்ன மேட்டரு, என்கிட்டயே சொல்லுப்பா, ஆமா, எப்பவும் ஒரு தள்ளுவண்டியில தான வருவீங்க? இப்ப battery வண்டியா? நல்லா இருக்குய்யா" "ஆமாங்க, இப்பதான் கொடுத்தாங்க. கொஞ்ச நாள் ஆச்சு, நைட்டு சார்ஜுல போட்டா போதும்" என்று வெள்ளந்தியாய்ச் சிரித்தார் செல்வம். "சரிப்பா, என்ன வேணும்னு சொல்லவே மாட்டுறியே?" எனச் சொல்லிக் கொண்டிருக்கும் போதே, காவல் நிலையத்...