இடிக்கோடர் - குறள் கதை
இடிக்கோடர் - முடிவிலி (இயல்: துறவறவியல் அதிகாரம்: தவம் குறள் எண்: 264) மலர்கள் மலர்ந்தது மாலைகளாக்கப் பறிப்பதற்கா அல்லது பறித்தது போக காற்றில் வாடி உதிர்ந்து மரிப்பதற்கா எனத் தெரிந்து அறியாத வண்ணம் பூக்கள் உதிர்ந்து தேரநாட்டு மன்னனின் அரண்மனைத் தோட்டத்தின் மண்ணே பூக்களின் வண்ணமாய் மாறியதோ என்னும் தோற்றத்தைக் கொடுத்துக் கொண்டிருந்தது. அந்தத் தோட்டத்தின் நடுவே எட்டு நடனமிடும் பெண்கள் சிலைகளையே தூண்களாகக் கொண்டு, கூரையின் உட்புறம் மனமயக்கும் ஓவியங்களால் அலங்கரிக்கப்பட்ட மண்டபத்தில் தேரநாட்டு மன்னன் மூன்றாம் வழுணன் ஓய்வாய் அமர்ந்திருந்தான். தலைமைக்காவலன் வல்லன் மன்னரை நோக்கி வந்து, தன் தலைதாழ்ந்து மதிப்பு வழங்கியவாறு நின்றான். “வல்லா, காண வந்த சேதி?” “பெருங்கோ, தங்களை நமது தலைமை மருத்துவர் காண விழைகிறார்” “நாளை அரச மன்றத்தில் காணலாமே. இவ்வேளையில் பார்த்தே தீர வேண்டும் என்று என்ன கட்டாயம்?” என்ற மன்னனின் கேள்விக்குப் பதில் இல்லாது அமைதியே பதிலாய் வந்ததைக் கண்ட வழுணன், சில நொடிகளுக்குப் பின், “வல்லா, வரச்சொல்” என்றார். “உத்தரவு மன்னா” என்றபடி இரு அடிகள் பின்னா