என்ன விட்டா யாருமில்ல - குறள் கதை
என்னை விட்டா யாருமில்ல - முடிவிலி "அப்பா..." தூங்கிக் கொண்டிருந்த வேலு, தன் மகனின் குரலால் தூக்கத்தில் இருந்து விழித்தாலும், திரும்பாமல் "என்னடா?" என்றார். "திரும்புங்கப்பா, என் கேள்விக்குப் பதில் சொல்லுங்க" என்றான் சிவா. "ப்ச்" என்று அலுத்துக் கொண்டபடி திரும்பியவர், இரவு 12½ மணிக்கு கண்ணயராது விழித்துக் கொண்டிருந்த சிவாவைப் பார்த்து, "ஏன் டா தூக்கம் வரலையாடா ஒனக்கு? அரைச்சாமத்துல கேள்விக்குப் பதில்னுட்டு. என்னடா வேணும்?" என்றார். "நாம செத்தா எங்கப்பா போவோம்?" என்றான் சிவா. "ஏன்டா தூக்கத்துல எழுப்பிக் கேட்குற கேள்வியாடா இது? பேசாமத் தூங்குடா" என்ற வேலு, கண்ணிமைக்காமல் தன்னையே பார்த்துக் கொண்டிருக்கும் சிவாவைப் பார்க்க, இப்போது கொஞ்சம் பொறுமையாக, "அம்மாகிட்ட போவோம்டா, சரி தூங்குப்பா, அப்பாக்கு நாளைக்கு வேலைக்குப் போகணும்டா, தூங்குடா செல்லம்ல" என்றார். "அப்பா, இன்னும் ஒரே ஒரு கேள்விப்பா" என்றான் சிவா. "ம்" என்ற தந்தையிடம், "எல்லாரும் கண்டிப்பாகச் ச...