புற்றுப்பாம்பு - குறள் கதை
புற்றுப்பாம்பு - முடிவிலி தோன்றின் புகழொடு தோன்றுக அஃதிலார் தோன்றலின் தோன்றாமை நன்று. (236) (அதிகாரம் : 24 புகழ், இயல்: இல்லறவியல்) என்றும் இல்லாதது போல, இன்று பெங்களூரின் சாலைகள் நெரிசல் இல்லாமல் இருக்க விரைவிலேயே அலுவலகம் வந்து சேர்ந்திருந்தேன். உள்ளே நுழைந்த போது, எனக்கு முன்னரே ஜனா உட்கார்ந்திருந்தான். "Good morning, இளங்கோ" ஜனா முகம் மலர்ந்திருந்தது. "Good morning ஜனா, பெங்களூர் trafficல மாட்டாம office வந்துட்ட போல. செம மகிழ்ச்சியா இருக்க?" என்றேன். "அதெல்லாம் ஒன்னுமில்ல. ஆனா, குட் நியூஸ்." என்று சிரித்தான். முகத்தில் இன்னும் வாட்ஸ் வெளிச்சம் கூடியது. அவன் கூறாமலேயே நல்ல செய்தி என்னவெனத் தெரிந்தது. "Congrats, ஜனா, junior ஜனாவா?" என்று நான் சொல்ல, "Thanks இளங்கோ" என்றான் ஜனா. "ஹே, இன்னிக்கு நம்ம team எல்லாம் dinner போறோம். உன்னோட treat" என்று சொல்லிவிட்டு, என்னுடைய cabinக்குள் நுழைந்தேன். எனது கணினியைத் துவக்கி, எனது மின்னஞ்சலுக்குள் நுழைந்தேன். கண்ணனிடம் இருந்...