உலக பாலைவனமாக்கல் மற்றும் வறட்சிக்கு எதிரான போராட்ட நாள் - World Day to Combat Desertification and Drought
இன்று பாலைவனமாதல் மற்றும் வறட்சிக்கு எதிரான போராட்டத்தில் உலகை - இயற்கையை நேசிக்கும் அனைவருக்கும் - சுயநலமாய் சுரண்டி தின்னாமல் நம் அடுத்த தலைமுறைக்கு வாழத் தகுதியான இடமாக இந்த புவியை விட்டு செல்ல வேண்டிய கடமை உள்ள அனைவருக்கும் முக்கியமான நாள். ஜூன் 17 - உலக பாலைவனமாக்கல் மற்றும் வறட்சிக்கு எதிரான போராட்ட நாள். 1994 முதல் இந்த நாளானது ஐக்கிய நாடுகள் சபையினால் கொண்டாடப்பட்டு வருகிறது. உலகின் பல நாடுகளில் இதற்கான பல விழிப்புணர்வு முகாம்களும் நிகழ்வுகளும் ஐக்கிய நாடுகள் சபையினால் நடத்தப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் ஒரு பேசுபொருள் தலைப்பாக கொண்டு அதன் அடிப்படையில் விழிப்புணர்வு செய்யப்படுகிறது. அதன்படி இந்த வருட பேசுபொருள்: நிலச்சீரழிவும் மக்கள் இடம்பெயர்வும் (Land Degradation and Migration) இன்று நம் நாட்டில் நிலவும் சூழலுக்கு ஏற்ற தலைப்பு தான், அல்லவா? இன்று மக்கள் பணிக்காக வேறு நாடுகளுக்கு அல்லது நகரம் நோக்கி இடம்பெயர முக்கிய காரணிகளில் ஒன்று - நிலச்சீரழிவு. வெகு காலமாக ஆற்றுமணல் அள்ளுதல், கால்வாய் பராமரிப்பின்மை, நீர் மேலாண்மையின்மை, நெகிழிப் பயன்பா...