அடுத்த நொடி - குறள் கதை
அடுத்த நொடி - முடிவிலி 21.03.2020 காலை 5:42 ம ணி மேலவளம் பேட்டை சந்திப்பை நோக்கி , நெடுஞ்சாலையின் உள்புறச்சாலையில் வந்து கொண்டிருந்தது வெங்கடேசனின் சீருந்து . சந்திப்பின் மிக அருகே வந்த நேரம் , திடீரென தனக்கு முன் தெரிந்த இருசக்கர வண்டியின் முன் சக்கரத்தைக் கவனித்த வெங்கடேசனின் கண்கள் கூர்மையடைந்தன . கைகள் steering ஐ இடது புறமாக விரைந்து திருப்பின . மிக அருகில் வந்து திடீரென திரும்பியதால் , சுழன்ற வண்டியின் பின்புறம் இருசக்கர வண்டியின் முன் சக்கரத்தில் தட்ட , அந்த வண்டி கவிழ்ந்து வண்டியின் பின் கட்டப்பட்டிருந்த கேனில் இருந்த பால் சாலையில் கொட்டியது . வெங்கடேசனின் அருகில் இருந்த பூரணி " ஆ… " என்று அலறினாள் , அவளது கைகள் அனிச்சையாய் dashboard ஐப் பற்றின , வண்டி இன்னும் இடது புறம் நகர்ந்ததில் , Service road க்கும் , நெடுஞ்சாலைக்கும் நடுவே இருந்த தடுப்பில் இடிபடாமல் தப்பி , service road ல் சென்று நின்றது . மேலவளம் பேட்டை சந்திப்பில் , சாலையைக் கடக்க நினைத்து , திடீரென உள்நுழைந்த பால் ஏற்றி வந்த இரு சக்கர வண்டி , கார் வருவதைக் கண்டு சட்டென சாலையிலே நிறுத்த , கண்ணிமைக்கும் நேரத்தில...