கருகிய சிறகுகள் - லிய்போவ் சிரோட்டா (Liubov sirota) தமிழாக்கம்
கருகிய சிறகுகள் - லிய்போவ் சிரோட்டா ஈடுசெய்யவோ, நிலையைச் சரி செய்யவோ இயலாது, அந்த ஏப்ரலின் தவறையும், துயரையும். எங்கள் விழித்துக்கொண்ட உள்ளுணர்வின் கூன்முதுகுகள் வாழ்நாள் முழுதும் இந்த வேதனைச்சுமையைத் தாங்கியே ஆக வேண்டும். நம்புங்கள், முடியவே முடியாது, எங்கள் இழந்த வீடுகளின் துயர்தரும் வலியிலிருந்து மீண்டெழ, சரிகட்ட. வலி எங்கள் துடித்திடும் இதயத்தில் என்றும் இருந்திடும், அச்சத்தின் நினைவுகளாய். அதோ, முள்ளாய்க் குத்தும் கசப்பினால் சூழப்பட்ட எங்கள் விந்தை நகரம் கேட்கிறது: அனைத்தையும் மன்னித்தும், உளமார நேசித்தும், ஏன் எக்காலத்தும் கைவிடப்பட்டுள்ளேன்? இரவு நேரங்களில், வெறுமை மூழ்கிய எங்கள் நகரம் விழித்துக் கொள்கிறது. அதோ, அங்கே எங்கள் கனவுகள் மேகம் போல அலைகின்றன. நிலவொளியால் சாளரங்களை ஒளிரச் செய்கின்றன. அங்கு மாறாத நினைவொடு மரங்கள் நிற்கின்றன. எங்கள் கைகளின் தொடுதலை நினைத்துக் கொண்டு. இனியும் தன்னிழல் தனில் நிற்க, சுடும் வெயிலில் இருந்து காத்துக் கொள்ள, யாரும் இல்லையெனத் தெரிந்த அம்மரங்களின் வலி எப்படி இருக்கும்? இரவில் மரங்களின்