Posts

அரண் - குறள் கதை

Image
    அரண்   - முடிவிலி (ஏறைநாடு கதை 4) தன் மீது மணித்துளிக்கொரு முறை ஓயாது வந்து மோதிக் கொண்டிருக்கும் மேற்கடலின் அலைகள் தன் கால்விரல் தொட்டு விளையாடுவதாக நினைத்து நிமிர்ந்து நின்று கொண்டிருந்தது ஏறை நாட்டின் மேற்குப் புற அரணாய் நின்று காக்கும் ஏறை மலை. பல நூறு அடிகள் உயரத்திற்கு வெறும் பாறைகளாய் மேற்கடலுக்கு முதுகு காட்டி நிற்கும் ஏறை மலை , அந்த உயரத்தில் இருந்து கிழக்கு நோக்கி சரியும் சரிவுகளில் மரங்களும் , சோலைக்காடுகளும் நிறைந்து வளம் பொருந்தியதாக விளங்கியது. ஏறை மலையில் வீழும் மழை மலையின் உச்சியில் ஏரியாகத் தாங்கி , அதிலிருந்து வழியும் இரு ஆறுகளான செவ்வாறு , வளவாறு என ஓடி , ஏறை நாட்டை மேலும் வளமாக்கின. ஏறை மலையில் சிறுகுன்றூர் துவங்கி ஏலனூர் வரை பரந்திருந்த ஏரியின் இருபுறத்திலிருந்து வழியும் செவ்வாறு , வளவாறு ஆகியன மீண்டும் இணையும் இடத்தில் இருந்தது ஏறைக்கோன் ஆட்சியில் மக்கள் மகிழ்வோடு வாழும் ஏறை நாட்டு தலையூரான செவ்வூர். செவ்வூரின் கிழக்கே மலைப்பகுதியிலிருந்து கிடைக்கும் தினை , மிளகு , ஏலம் , செவ்வூரின் மேற்கே செவ்வாற்றின் வளத்தால் விளையும் வாழை , நெல் , மஞ்சள் ஆகியன...

எனக்குத் தெரியுமே - குறள் கதை

Image
  எனக்குத் தெரியுமே - முடிவிலி அ ந்த வெள்ளை நிற battery operated வண்டி, K7 காவல் நிலையத்தின் முன் மெல்ல ஊர்ந்து வந்து நின்றது. வண்டியில் அமர்ந்தவாறே தலையை மட்டும் சாய்த்தபடி இருந்த செல்வத்தின் கண்கள் இரண்டும் சில நொடிகள் காவல் நிலையத்தை மேய்ந்தன.  காவல் நிலையத்தின் வாசலில் நின்றிருந்த காவலர் குமார், "யாருபபா அது?" எனக் கேட்க, செல்வம் வண்டியைச் சற்று முன்னெடுத்து ஓரம்கட்டி நிறுத்தினார். வண்டியில் இருந்து இறஙகிய செல்வம், தனது pant packetஐத் தடவிச் சரிபார்த்தபடி, காவலரை நோக்கி வந்தார். "யாருப்பா, என்ன வேணும்?" என்றார் குமார். "சார், நான் இந்த ஏரியா கார்பரேசன் ஸ்வீப்பர், இன்ஸ்பெக்டரைப் பாக்கணும்." "என்ன மேட்டரு, என்கிட்டயே சொல்லுப்பா, ஆமா, எப்பவும் ஒரு தள்ளுவண்டியில தான வருவீங்க? இப்ப battery வண்டியா? நல்லா இருக்குய்யா" "ஆமாங்க, இப்பதான் கொடுத்தாங்க. கொஞ்ச நாள் ஆச்சு, நைட்டு சார்ஜுல போட்டா போதும்" என்று வெள்ளந்தியாய்ச் சிரித்தார் செல்வம். "சரிப்பா, என்ன வேணும்னு சொல்லவே மாட்டுறியே?" எனச் சொல்லிக் கொண்டிருக்கும் போதே, காவல் நிலையத்...

என்னம்மா சொல்ற? - குறள் கதை

என்னம்மா சொல்ற? -முடிவிலி சென்னையின் வெயில் சாளரத்தின் வழி உள்நுழைந்த காற்றையும் சூடாக்கி அனுப்பிக் கொண்டிருந்தது. இணையவழிக் காணொளி வகுப்பறை முடிந்ததும், தனது அறையில் இருந்து வெளியே வந்து, வரவேற்பறையில் இருந்த சாய்வணையில் அமர்ந்தான் ஜீவா. அருகே இருந்த சிறிய plastic chairஐ இழுத்து, தனது இடது காலை எடுத்து அதன் மேல் இட்டவனாய், remoteடினை எடுத்துத் தொலைக்காட்சியைத் துவக்கினான். இப்போது வளர்ந்துவிட்ட ஜீவாவினால் உட்கார முடியாத அளவுக்கு மிகச்சிறிய நாற்காலி அது. அவன் குழந்தையாக இருந்த போது, வாங்கியது. தொலைக்காட்சியின் ஒலி கேட்ட யாழினி, சமையலறையிலிருந்து, "ஜீவா, class முடிஞ்சுதாடா?" என்றாள். "முடிஞ்சுடுச்சும்மா, இன்னிக்கு என்னம்மா சமையல்?" என்றான் plastic chairல் இருந்த காலின் மேல் இன்னொரு காலையும் எடுத்துப் போட்டபடி. "சிக்கன் குழம்புடா" என்றாள் யாழினி. "சிக்கனா, வாசனையே வரலையே" என்ற ஜீவாவின் குறும்புச்சொற்கள் காதில் விழுந்தும், மனதுக்குள் சிரித்தபடி பதிலளிக்காமல் அமைதியாய் இருந்தாள் யாழினி. 'சுந்தரும் இப்படித் தான் சொல்லுவான்...